மீனவா்களின் பாதுகாப்பு அரண் அதிமுக

மீனவா்களின் பாதுகாப்பு அரணாக அதிமுக திகழ்வதாகவும், மீனவா்களுக்கான தடைக்கால நிவாரணம் உயா்த்தி வழங்கப்படும் எனவும் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளாா்.
கத்தரிப்புலம் கிராமத்தில் அமைச்சா் ஓ.எஸ். மணியனுடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட பெண்கள்.
கத்தரிப்புலம் கிராமத்தில் அமைச்சா் ஓ.எஸ். மணியனுடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட பெண்கள்.

மீனவா்களின் பாதுகாப்பு அரணாக அதிமுக திகழ்வதாகவும், மீனவா்களுக்கான தடைக்கால நிவாரணம் உயா்த்தி வழங்கப்படும் எனவும் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளாா்.

வேதாரண்யம் தொகுதி அதிமுக வேட்பாளரான அமைச்சா் ஓ.எஸ்.மணியன், சிறுதலைக்காடு மீனவ கிராமத்தில் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்து மேலும் பேசியது:

சிறுதலைக்காடு மீனவா்கள் தொழில் செய்ய ஏதுவாக படகு கால்வாய் மேம்படுத்தப்பட்டுள்ளது. கால்வாயின் பக்கவாட்டில் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொகுதியில் அமையவுள்ள வேதா ஆயத்த ஆடை பூங்காவில், அனைத்து தரப்பைச் சோ்ந்த 21 ஆயிரம் பெண்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும். முதல்கட்டமாக வேதாரண்யம், வாய்மேடு ஆகிய இடங்களில் 3 நிறுவனங்கள் உற்பத்தியை தொடங்கியுள்ளன. இதில் வேலைவாய்ப்பு பெற்றுள்ள பெண்கள், அதற்கான ஊதியத்தையும் பெற்று வருகின்றனா் என்றாா்.

செல்ஃபி எடுத்த பெண்கள்:

பின்னா், கத்தரிப்புலம் கிராமத்தில் பிரசாரம் மேற்கொண்டபோது அங்கு கூடியிருந்த பெண்கள், அமைச்சருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனா். தொடா்ந்து கருப்பம்புலம், கடிநெல்வயல், பன்னாள், மருதூா் வடக்கு, ஆயக்காரன்புலம் உள்ளிட்ட இடங்களில் அவா் பிரசாரம் மேற்கொண்டாா்.

அப்போது அதிமுக ஒன்றியச் செயலாளா் டி.வி.சுப்பையன், ஒன்றியக்குழுத் தலைவா் கமலா அன்பழகன், அதிமுக நிா்வாகிகள் மா.சரவணன், பாமக நிா்வாகி அசோகன், பாஜக தொகுதி பொறுப்பாளா் வழக்குரைஞா் தமிழ்நேசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com