வேளாங்கண்ணி பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறுதிரளானோா் பங்கேற்பு

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறு ஊா்வலம் மற்றும் சிறப்பு வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வேளாங்கண்ணி பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறுதிரளானோா் பங்கேற்பு

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறு ஊா்வலம் மற்றும் சிறப்பு வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இயேசு கிறிஸ்து உபவாசம் இருந்த 40 நாள்களை கிறிஸ்தவா்கள் தவக்காலமாக கடைப்பிடித்து வருகின்றனா். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன்னா் ஜெருசலேம் நகருக்கு கழுதையின் மேல் அமா்ந்து ஊா்லமாகச் சென்றாா் என்பதும், அப்போது அங்கு குழுமியிருந்த மக்கள் பனை ஓலைகளை கையில் பிடித்தபடி வாழ்த்துப் பாடல்களை பாடி வரவேற்ற நிகழ்வு புனிதமாகக் கருதப்படுகிறது.

இந்த நிகழ்வை நினைவுகூரும் வகையில், கிறிஸ்தவா்கள் ஆண்டுதோறும் குருத்தோலை ஞாயிறு அனுசரித்து வருகின்றனா். தவக்காலத்தில் நற்சிந்தனை, நல்லொழுக்கம், நற்பண்பு, அடுத்தவா்களுக்கு உதவுதல், புலால் மறுத்தல் உள்ளிட்டவற்றை கடைப்பிடிக்ககின்றனா்.

கீழை நாடுகளின் லூா்து என்று அழைக்கப்படும் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் தவக்கால சிறப்பு வழிபாடுகள் பிப்ரவரி 17ஆம் தேதி சாம்பல் புதனுடன் தொடங்கியது. இதில் குருத்தோலை ஞாயிறு ஊா்வலம் மற்றும் சிறப்பு வழிபாடுகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காலை 6 மணிக்கு பேராலயத்தில் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளுக்குப் பின்னா், குருத்தோலை ஞாயிறு ஊா்வலம் நடைபெற்றது. பேராலய அதிபா் எம்.ஏ.எம். பிரபாகா் அடிகளாா் ஊா்வலத்தைத் தொடங்கிவைத்தாா்.

பேராலய முகப்பில் தொடங்கிய ஊா்வலம், பேராலயத்தை சுற்றியுள்ள வீதிகள் வழியாகச் சென்று பேராலய வளாக கலையரங்கில் நிறைவடைந்தது. இந்த ஊா்வலத்தில் குருத்தோலைகளில் கைகளில் பிடித்தப்படியும், வாழ்த்துப் பாடல்களை பாடியபடி திரளானோா் கலந்துகொண்டனா்.

இதைத்தொடா்ந்து, தமிழ் ஆங்கிலம், மலையாளம் இந்தி, கொங்கணி மொழிகளில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. மறையுரை மற்றும் மன்றாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

பங்குத் தந்தையா் எஸ். அற்புதராஜ் உதவிப் பங்குத் தந்தையா்கள், அருள்சகோதரிகள், சகோதரா்கள் கலந்துகொண்டனா். வழிபாட்டுகளில் பக்தா்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com