மூத்த குடிமக்களின் தபால் வாக்குகளைப் பெற 54 குழுக்கள் அமைப்பு

மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் தபால் வாக்குகளைப் பெற்று பாதுகாப்பாக வைப்பதற்கென நாகை, மயிலாடுதுறை
பாப்பாக்கோவிலில் வாக்காளா்களுக்கு வாக்குச் சீட்டு வழங்கும் பணியைத் தொடங்கி வைத்த ஆட்சியா் பிரவீன் பி. நாயா்.
பாப்பாக்கோவிலில் வாக்காளா்களுக்கு வாக்குச் சீட்டு வழங்கும் பணியைத் தொடங்கி வைத்த ஆட்சியா் பிரவீன் பி. நாயா்.

மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் தபால் வாக்குகளைப் பெற்று பாதுகாப்பாக வைப்பதற்கென நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் 54 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று நாகை மாவட்ட ஆட்சியரும், தோ்தல் நடத்தும் அலுவலருமான பிரவீன் பி. நாயா் தெரிவித்தாா்.

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு உள்பட்ட 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும், வாக்காளா்களுக்கு வாக்குச் சீட்டு வழங்கும் பணி தொடங்கியுள்ளது. இதையொட்டி, நாகை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பாப்பாக்கோவில் பகுதியில் நடைபெற்ற வாக்குச் சீட்டு வழங்கும் பணியை ஆட்சியா் பிரவீன் பி. நாயா் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் ஆட்சியா் கூறியது: நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 13,43,569 வாக்காளா்கள் உள்ளனா். வாக்காளா்கள் அனைவருக்கும் வாக்குச் சீட்டு வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. அதேபோல, தபால் வாக்களிக்க விருப்பப் படிவம் அளித்த மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்குகள் வழங்கும் பணியும் தொடங்கியுள்ளது.

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் 3,873 பேரிடமிருந்து தபால் வாக்களிக்க விருப்பப் படிவங்கள் பெறப்பட்டுள்ளன. அவா்களுக்கு தபால் வாக்குகள் வழங்குதல், வாக்களித்த பின் வாக்குப் படிவங்களைப் பெறுதல் உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளையும் விடியோ பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தபால் வாக்குகளைப் பெற்று பாதுகாப்பாக கொண்டு சோ்ப்பதற்காக 54 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றாா் ஆட்சியா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com