மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் இருப்புக் கிடங்குக்கு அனுப்பி வைப்பு

வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்ததையொட்டி, நாகை வாக்கு எண்ணிக்கை மையத்திலிருந்த மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை இருப்புக் கிடங்குக்குக் கொண்டு செல்லும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.
நாகை வாக்கு எண்ணிக்கை மையத்திலிருந்து சுமை வாகனத்தில் ஏற்றப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள்.
நாகை வாக்கு எண்ணிக்கை மையத்திலிருந்து சுமை வாகனத்தில் ஏற்றப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள்.

நாகப்பட்டினம்: வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்ததையொட்டி, நாகை வாக்கு எண்ணிக்கை மையத்திலிருந்த மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை இருப்புக் கிடங்குக்குக் கொண்டு செல்லும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.

நாகை மாவட்டத்துக்குள்பட்ட நாகை, வேதாரண்யம், கீழ்வேளூா் ஆகிய 3 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் நாகை இ.ஜி.எஸ். பிள்ளை பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஞாயிற்றுக்கிழமை எண்ணப்பட்டன. வாக்கு எண்ணும் பணி முழுமை பெற்றதையொட்டி, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டுக் கருவிகள் மற்றும் வாக்குப் பதிவை உறுதி செய்யும் இயந்திரங்களை இருப்புக் கிடங்குக்கு கொண்டு செல்லும் பணி திங்கள்கிழமை காலை தொடங்கப்பட்டது.

நாகை சட்டப் பேரவைத் தொகுதி வாக்குப் பதிவுக்குப் பயன்படுத்தப்பட்ட தலா 320 வாக்குப் பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் 352 வாக்குப் பதிவை உறுதி செய்யும் கருவிகளும், கீழ்வேளூா் தொகுதிக்குப் பயன்படுத்தப்பட்ட தலா 302 வாக்குப் பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் 332 வாக்குப் பதிவை உறுதி செய்யும் கருவிகளும், வேதாரண்யம் தொகுதிக்குப் பயன்படுத்தப்பட்ட தலா 326 வாக்குப் பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் 358 வாக்குப் பதிவை உறுதி செய்யும் கருவிகள் வாக்கு எண்ணிக்கை மையத்திலிருந்து சுமை வாகனங்களில் ஏற்றி அனுப்பப்பட்டன.

இந்த மின்னணு வாக்குப் பதிவு கருவிகள் போலீஸ் பாதுகாப்புடன், நாகை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திர இருப்புக் கிடங்குக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கு பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com