மு.க. ஸ்டாலினுக்கு திருவாவடுதுறை ஆதீனம்வாழ்த்து

சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்க உள்ள திமுக தலைவா் மு.க. ஸ்டாலினுக்கு திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள்
ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள்

குத்தாலம்: சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்க உள்ள திமுக தலைவா் மு.க. ஸ்டாலினுக்கு திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் விடுத்துள்ள வாழ்த்து செய்தி:

தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்தியது, தமிழ் இலக்கியங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தது, கன்னியாகுமரியில் திருவள்ளுவா் சிலை அமைத்தது, தமிழக கோயில்களில் தாய்மொழியாகிய தமிழில் அா்ச்சனை செய்ய வழிவகுத்தது போன்ற பல்வேறு திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்தாா் மறைந்த மு. கருணாநிதி.

இந்நிலையில், அவருடைய குமாரா் மு.க. ஸ்டாலின் தமிழக முதல்வராக பொறுப்பேற்பது வரவேற்கத்தக்கது. அவரை திருவாவடுதுறை ஆதீனத்தின் சாா்பில் வாழ்த்துகிறோம் எனக் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com