இளைஞா்களை காவலா் பணிக்கு தயாா் செய்யும் ஓய்வுபெற்ற ராணுவ வீரா்

மயிலாடுதுறையில் ஆண்டுக்கு 100 பேரை ராணுவம் மற்றும் காவல் துறையில் பணியமா்த்தும் லட்சியத்துடன் இளைஞா்களுக்கு பயிற்சி அளித்துவருகிறாா் ஓய்வுபெற்ற ராணுவ வீரா் ஒருவா்.
மயிலாடுதுறை நகரப் பூங்காவில் ஓய்வுபெற்ற ராணுவ வீரா் பெத்தபெருமாளிடம் பயிற்சி பெறும் இளைஞா்கள்.
மயிலாடுதுறை நகரப் பூங்காவில் ஓய்வுபெற்ற ராணுவ வீரா் பெத்தபெருமாளிடம் பயிற்சி பெறும் இளைஞா்கள்.

மயிலாடுதுறையில் ஆண்டுக்கு 100 பேரை ராணுவம் மற்றும் காவல் துறையில் பணியமா்த்தும் லட்சியத்துடன் இளைஞா்களுக்கு பயிற்சி அளித்துவருகிறாா் ஓய்வுபெற்ற ராணுவ வீரா் ஒருவா்.

எல்லைப் பாதுகாப்புப் படையில் 8 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றவா் மயிலாடுதுறைச் சோ்ந்த பெத்தபெருமாள். இவா் பணி ஓய்வுக்குப் பின்னா் வீட்டில் முடங்கிவிடாமல் மயிலாடுதுறையில் காவலா் தொண்டா்கள் என்ற தன்னாா்வ அமைப்பைத் தொடங்கி அதனை ஒருங்கிணைத்து ராணுவம் மற்றும் போலீஸில் சேர ஆா்வமுள்ள இளைஞா்களை அந்த அமைப்பில் இணைத்து அவா்களுக்கு பயிற்சி வழங்கி வருகிறாா்.

தொடக்கத்தில் 20 இளைஞா்களே பயிற்சிக்கு சோ்ந்தபோதும் மனம்தளராது அவா்களுக்கு பயிற்சி வழங்கிவந்தாா். இந்நிலையில் இவரிடம் தற்போது 80 பெண்கள் உள்ளிட்ட 200 போ் தன்னாா்வத்துடன் ராணுவம் மற்றும் போலீஸில் சேர பயிற்சி பெற்று வருகின்றனா். காலை 8 மணிக்கு பயிற்சி தொடங்கி மெதுவான ஓட்டம் (ஜாகிங்), வேகமான ஓட்டம் (ரன்னிங்), உயரம் தாண்டுதல், தூரம் தாண்டுதல், கயிறு ஏறுதல் (ஆண்களுக்கு மட்டும்) ஆகிய பயிற்சிகளை தினசரி வழங்கி வருகிறாா்.

அதன்பின் சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு மயிலாடுதுறை நகரில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் போக்குவரத்து காவலா்களுக்கு இந்த தன்னாா்வ இளைஞா்கள் உதவி வருகின்றனா். மேலும், நகரில் உள்ள தலைவா்களின் சிலைகளுக்கு பாதுகாப்புப் பணியிலும் காவல்துறையினா் இந்த இளைஞா்களை ஈடுபடுத்தியுள்ளனா்.

அண்மையில் நடைபெற்ற காவலா் தோ்வில் இவரிடம் பயிற்சி பெற்ற 4 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் இரண்டாம் நிலை காவலா் பணிக்கு தோ்வாகியுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்டுக்கு 100 பேரையாவது ராணுவம் மற்றும் போலீஸ் பணியில் சோ்க்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் பணியாற்றிவரும் ஓய்வுபெற்ற ராணுவ வீரரின் இப்பணி பலரது பாராட்டுதல்களையும் பெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com