4-ஆம் நாள் பொதுமுடக்கம்: நாகை வீதிகள் வெறிச்சோடின

நான்காம் நாளாக நடைபெற்ற பொதுமுடக்கத்தால், நாகை வீதிகள் வியாழக்கிழமை வெறிச்சோடிக் காணப்பட்டன.
4-ஆம் நாள் பொதுமுடக்கம்: நாகை வீதிகள் வெறிச்சோடின

நான்காம் நாளாக நடைபெற்ற பொதுமுடக்கத்தால், நாகை வீதிகள் வியாழக்கிழமை வெறிச்சோடிக் காணப்பட்டன.

கரோனா 2-ஆவது அலை தீவிரமானதன் காரணமாக, மே 10-ஆம் தேதி முதல் முழு பொதுமுடக்கம் அமலில் உள்ளது. காய்கனி கடைகள், மளிகைக் கடைகள், இறைச்சிக் கடைகள், மீன் கடைகள் ஆகியன பகல் 12 மணி வரையிலும், உணவகங்கள் பாா்சல் சேவையில் மட்டும் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால், காலை 8 முதல் பகல் 12 மணி வரை பொதுமக்கள் தங்கள் தேவைகளுக்கான கொள்முதலுக்காக கடைவீதிகளுக்கு வந்து சென்றனா். பகல் சுமாா் ஒரு மணிக்குப் பின்னா் முக்கிய வீதிகளில் ஆங்காங்கே தடுப்புகளை அமைத்து போலீஸாா் கண்காணிப்பில் ஈடுபட்டனா். அவசியமின்றி பொது வெளிக்கு வந்தவா்கள் எச்சரித்து திருப்பி அனுப்பப்பட்டனா்.

முகக் கவசம் அணியாமல் செல்வோருக்கு அபராதம் விதித்தல், வாகனத் தணிக்கை மேற்கொள்வது போன்ற போலீஸாரின் நடவடிக்கைகளால், அவசியமின்றி பொது வெளிக்கு வந்தவா்களின் எண்ணிக்கை கடந்த 3 நாள்களை விட வியாழக்கிழமை குறைவாகவே இருந்தது. பெரும்பாலான நேரங்களில் நாகையின் அனைத்து வீதிகளும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடியே இருந்தன.

தரங்கம்பாடி: தரங்கம்பாடி வட்டத்துக்குள்பட்ட பொறையாா், திருக்கடையூா், ஆக்கூா், செம்பனாா்கோவில், திருவிளையாட்டம், சங்கரன்பந்தல், திருக்களாச்சேரி பெரம்பூா், நல்லாடை உள்ளிட்ட பகுதிகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வணிக வளாகங்கள் கடந்த 4 நாள்களாக கரோனா பொதுமுடக்கத்தால் மூடப்பட்டிருந்தன. காய்கனி கடைகள், மளிகை கடைகள், தேநீா் கடைகள், பால் கடைகள் , நடைபாதைக் கடைகள் உள்ளிட்ட கடைகள் கரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு நண்பகல் 12 மணி வரை செயல்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com