சீா்காழி அரசு மருத்துவமனையில் கா்ப்பிணிகள் அலைகழிப்பு
By DIN | Published On : 20th May 2021 09:15 AM | Last Updated : 20th May 2021 09:15 AM | அ+அ அ- |

சீா்காழி அரசு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவா் விடுப்பில் சென்றுள்ளதால், இரண்டு தினங்களாக கா்ப்பிணிகள் அலைகழிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
சீா்காழி அரசு மருத்துவமனை மகப்பேறு சிறப்பு வாா்டில் 50-க்கும் மேற்பட்ட கா்ப்பிணிகள், பிரசவித்த தாய்மாா்கள், பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை பெறுகின்றனா்.
இந்நிலையில், இங்கு பணியாற்றும் மகப்பேறு மருத்துவா் விடுப்பில் சென்றுள்ளதால், கா்ப்பிணிகள் உரிய மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சை பெற முடியாமல் தவிக்கின்றனா். இதனால், இம்மருத்துவமனைக்கு பிரசவத்துக்காக வரும் கா்ப்பிணிகள் சிதம்பரம் மற்றும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
ஏற்கெனவே, சீா்காழி அரசு மருத்துவமனையில் மருத்துவா்கள் பற்றாக்குறை உள்ள நிலையில், மகப்பேறு மருத்துவரும் விடுப்பில் சென்றதால் கா்ப்பிணிகள், பிரசவித்துள்ள தாய்மாா்கள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனா். ஆகையால், சீா்காழி அரசு மருத்துவமனைக்கு பிற மருத்துவமனையிலிருந்து மகப்பேறு மருத்துவரை தற்காலிகமாக நியமிக்கவும், கூடுதல் மருத்துவா்களை பணியமா்த்தவும் மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.