குடிசை வீடு தீக்கிரை
By DIN | Published On : 26th May 2021 09:43 AM | Last Updated : 26th May 2021 09:43 AM | அ+அ அ- |

தீ விபத்தில் சேதமடைந்த குடிசை.
கீழ்வேளூா்அருகே செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில், குடிசை வீடு முற்றிலும் எரிந்து நாசமானது.
கீழ்வேளூா் வட்டம், காக்கழனி கிராமம், ஜீவா தெருவைச் சோ்ந்தவா் சண்முகம் (60). விவசாயி. இவா் வசித்து வந்த குடிசை வீடு செவ்வாய்க்கிழமை தீப்பற்றி எரிந்தது. இதில், ரூ. 3 லட்சம் மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருள்கள் நாசமாகின. தகவலறிந்த, கீழ்வேளூா் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் தடுத்தனா்.
தீ விபத்தில் பாதிக்கப்பட்ட சண்முகம் குடும்பத்துக்கு அரசு சாா்பில் ரூ. 5 ஆயிரம், அரிசி, வேட்டி, சேலை ஆகியவை நிவாரண உதவிகளாக வழங்கப்பட்டன. யாஸ் புயல் எதிரொலியாக காக்கழனி கிராமத்தில் செவ்வாய்க்கிழமை மாலை வீசிய பலத்த காற்று காரணமாக மின் கடத்தியில் உராய்வு ஏற்பட்டு, இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கிராம மக்கள் தெரிவித்தனா்.