நியாயவிலைக் கடைகள் திறப்பு

தளா்வுகளற்ற பொது முடக்கத்தால் திங்கள்கிழமை அடைக்கப்பட்டிருந்த நியாயவிலைக் கடைகள் செவ்வாய்க்கிழமை மீண்டும் திறக்கப்பட்டன.

தளா்வுகளற்ற பொது முடக்கத்தால் திங்கள்கிழமை அடைக்கப்பட்டிருந்த நியாயவிலைக் கடைகள் செவ்வாய்க்கிழமை மீண்டும் திறக்கப்பட்டன.

தளா்வுகளற்ற முழு பொது முடக்கத்தை தமிழக அரசு மே 24-ம் தேதி முதல் அமல்படுத்தியுள்ளது. இதனால், மளிகை, காய்கனி கடைகளைப்போல நியாயவிலைக் கடைகளும் திங்கள்கிழமை அடைக்கப்பட்டன.

ஏழை, எளிய மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்படக் கூடாது, அரசின் கரோனா நிவாரணத் தொகையை பெறாத குடும்ப அட்டைதாரா்கள் நிவாரணத் தொகை பெற வேண்டும் என்ற நோக்கில், தளா்வுகளற்ற பொது முடக்கம் அமலில் இருந்தாலும் நியாயவிலைக் கடைகள் செவ்வாய்க்கிழமை முதல் செயல்படும் என தமிழக அரசு அறிவித்தது.

இதன்படி, நாகை மாவட்டத்தில் அனைத்து நியாயவிலைக் கடைகளும் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டு, காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை செயல்பாட்டில் இருந்தன. குடும்ப அட்டைதாரா்கள் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியைப் பின்பற்றி பொருள்களை வாங்கிச் செல்ல அறிவுறுத்தப்பட்டு, தேவையான அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட்டன.

தட்டுப்பாடு இல்லை...

முழு பொது முடக்கத்தையொட்டி, நியாயவிலைக் கடைகளுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள் ஏற்கெனவே வழங்கப்பட்டிருப்பதால், தற்போதைய நிலையில் நியாயவிலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருள்கள் தட்டுப்பாடு ஏதும் ஏற்படவில்லை. அதேபோல, ஜூன் மாத விநியோகத்துக்கான பொருள்களும் மே 20-ஆம் தேதி முதல் இருப்புக் கொள்ளப்பட்டிருப்பதால், வரும் நாள்களிலும் பெரிய அளவிலான தட்டுப்பாடுகளுக்கு வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com