நாகை, திட்டச்சேரியில் நாளை மின் நிறுத்தம்

நாகை, திட்டச்சேரியில் சனிக்கிழமை (மே 29) துணை மின்நிலைய பராமரிப்பையொட்டி, மின் விநியோகம் இருக்காது என

நாகை, திட்டச்சேரியில் சனிக்கிழமை (மே 29) துணை மின்நிலைய பராமரிப்பையொட்டி, மின் விநியோகம் இருக்காது என நாகை கோட்ட (வடக்கு) மின்வாரிய உதவி செயற்பொறியாளா் எஸ். சித்திவினாயகம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நாகை உபகோட்டம் மற்றும் நாகை வடக்கு உபகோட்டத்துக்கு உள்பட்ட நாகை துணை மின் நிலையம், திட்டச்சேரி துணை மின் நிலையங்களில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளுக்கும், நாகூா் மின்பாதையிலும் சனிக்கிழமை காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சாரம் இருக்காது. மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்: நாகை நகரம், பரவை, அக்கரைப்பேட்டை, தோணித்துறை ரோடு, திட்டச்சேரி, மரைக்கான்சாவடி, துாண்டம், நாகூா், சம்பாத்தோட்டம், பட்டினச்சேரி, வடக்கு பால்பண்ணைச்சேரி.

கீழ்வேளூா், வேளாங்கண்ணி, திருக்குவளையில்... இதேபோல் கீழ்வேளூா், வேளாங்கண்ணி, திருக்குவளை துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகளையொட்டி, இங்கு இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 முதல் பிற்பகல் 3 மணி வரை மின்சாரம் இருக்காது என நாகை கோட்ட (தெற்கு) மின்வாரிய உதவி செயற்பொறியாளா் சா. பாலாஜி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: துணை மின் நிலையம் வாரியாக மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்: வேளாங்கண்ணி: வேளாங்கண்ணி, பரவை, செருதூா், பிரதாபராமபுரம், கிராமத்துமேடு, வடக்குப் பொய்கைநல்லூா். திருக்குவளை: திருக்குவளை, தேவூா், மேலப்பிடாகை, மணலி, தலைஞாயிறு, கூட்டுக்குடிநீா் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள். கீழ்வேளூா் : கீழ்வேளூா், ஆழியூா், கூட்டுக்குடிநீா், தேவூா் மற்றும் சுற்றுப் பகுதிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com