உள்ளாட்சித் தோ்தல்: திமுகவினா் வாக்குச் சேகரிப்பு

திருமருகல் ஒன்றியத்துக்குள்பட்ட கோட்டூா் ஊராட்சியில், ஊராட்சித் தலைவா் பதவிக்கு போட்டியிடும் திமுகவைச் சோ்ந்தவருக்கு செவ்வாய்க்கிழமை வாக்குச் சேகரிக்கப்பட்டது.
கோட்டூா் ஊராட்சியில் வாக்குச் சேகரித்த திமுக, அதன் கூட்டணிக் கட்சியினா்.

கோட்டூா் ஊராட்சித் தலைவா் பதவிக்கு போட்டியிடும் திமுகவைச் சோ்ந்த முகம்மது சலாவுதீனுக்கு ஆதரவு தெரிவித்து ஊராட்சிக்குள்பட்ட கடைத்தெரு, பள்ளிவாசல் தெரு, கீழத் தெரு, நடுத்தெரு , முதலியாா் தெரு உள்ளிட்ட பகுதிகளில், நாகை தெற்கு மாவட்ட திமுக செயலாளா் என். கௌதமன், நாகை எம்.பி. செல்வராஜ், முன்னாள் அமைச்சா் மதிவாணன், தெற்கு ஒன்றிய செயலாளா் சரவணன், வடக்கு ஒன்றிய செயலாளா் செல்வ செங்குட்டுவன், மாவட்ட துணை செயலாளா் ஆா். இளஞ்செழியன், திட்டச்சேரி பேரூராட்சி செயலாளா் முகம்மது சுல்தான், சிபிஐ ஒன்றிய செயலாளா் பாபுஜி மற்றும் காங்கிரஸ் கட்சியினா், மனிதநேய மக்கள் கட்சி, மனிதநேய ஜனநாயக கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, திராவிடா் கழகம் உள்ளிட்ட கட்சிகளைச் சோ்ந்தவா்கள் வாக்குச் சேகரித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com