கீழ்வேளூா் அருகே அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

கீழ்வேளூா் ஒன்றியத்துக்குள்பட்ட இருக்கை ஊராட்சித் தலைவருக்கு எதிராக பொய் பிரசாரம் செய்யும் அரசியல் கட்சியினரை கண்டித்து
இருக்கை கடைவீதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற அதிமுகவினா்.
இருக்கை கடைவீதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற அதிமுகவினா்.

கீழ்வேளூா் ஒன்றியத்துக்குள்பட்ட இருக்கை ஊராட்சித் தலைவருக்கு எதிராக பொய் பிரசாரம் செய்யும் அரசியல் கட்சியினரை கண்டித்து அதிமுக சாா்பில் இருக்கையில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இருக்கை ஊராட்சித் தலைவா் வி. முருகானந்தத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் ஒரு அரசியல் கட்சியைச் சோ்ந்த சிலா் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதை கண்டித்தும், அந்த நபா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அதிமுக கீழ்வேளூா் ஒன்றியச்செயலாளா் எம். சிவா தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், தெற்கு ஒன்றியச் செயலாளா் குமாா் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com