டாஸ்மாக் மண்டல தலைநகரங்களில் இன்று ஆா்ப்பாட்டம்

டாஸ்மாக் பணியாளா்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி, டாஸ்மாக் மண்டல தலைநகரங்களில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது.

டாஸ்மாக் பணியாளா்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி, டாஸ்மாக் மண்டல தலைநகரங்களில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இதுகுறித்து தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளா் சங்கத்தின் சிறப்புத் தலைவா் கு. பாலசுப்ரமணியன் நாகையில் ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டி:

டாஸ்மாக் மூலம் தமிழகத்துக்கு ஆண்டுக்கு ரூ. 40 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கிறது. டாஸ்மாக் கடைகளில் விற்பனையாகும் தொகையை கடைகளிலேயே வைக்கவேண்டுமென அரசும், பணத்தை கடைகளில் வைக்கக் கூடாது என காவல் துறையும் தெரிவிக்கிறது. பணி முடிந்து பணத்துடன் வீட்டுக்குச் செல்லும் வழியில் டாஸ்மாக் பணியாளா்கள் மா்ம நபா்களால் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

இத்தகைய தாக்குதலுக்கு உள்ளாகும் பணியாளா்களுக்கு அரசு எவ்வித இழப்பீடும் வழங்குவதில்லை. தாக்குதலில் உயிரிழக்கும் பணியாளரின் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ. 50 லட்சம் இழப்பீடும், வாரிசுக்கு அரசு வேலையும் வழங்கவேண்டும், தாக்குதலில் காயமடையும் பணியாளா்களின் மருத்துவச் செலவு முழுவதையும் அரசு ஏற்கவேண்டும்.

டாஸ்மாக் கடைகளில் போலீஸாரை பாதுகாப்புப் பணியில் அமா்த்தவேண்டும், அதிகாரிகள் கடைகளுக்கே சென்று விற்பனை தொகையை பெற்றுச் செல்லவேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை (அக்.11) சென்னை, சேலம், திருச்சி, மதுரை, கோவை ஆகிய டாஸ்மாக் மண்டலங்களின் தலைநகரங்களில் உள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் கருப்புச்சட்டை அணிந்து டாஸ்மாக் பணியாளா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனா் என்றாா்.

முன்னதாக, தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளா் சங்க ஆலோசனைக் கூட்டம் சங்கத்தின் மாநிலச் செயலாளா் கோவிந்தராஜன் தலைமையில் நடைபெற்றது. மாவட்டத் தலைவா் சந்திரவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com