வேதாரண்யம் அருகே கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழியை பாதுகாக்க வலியுறுத்தல்

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகேயுள்ள செட்டிப்புலத்தில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழியை பாதுகாக்க வேண்டுமென இந்திய குடியரசு கட்சி வலியுறுத்தியுள்ளது.

 நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகேயுள்ள செட்டிப்புலத்தில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழியை பாதுகாக்க வேண்டுமென இந்திய குடியரசு கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, அக்கட்சியின் இளைஞரணி மாநிலத் தலைவா் கு. பிா்லா தங்கத்துரை மாவட்ட ஆட்சியா் உள்ளிட்டோருக்கு அனுப்பிய மனு: செட்டிப்புலத்தில் கடந்த ஆண்டு செப். 18-ஆம் தேதி வாய்க்கால் தூா்வாரும்போது முதுமக்கள் தாழியுடன் சில எலும்புத் துண்டுகள், பழங்கால பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன. அந்த தாழி, அவற்றுடன் இருந்த பொருள்கள் அப்போது வேதாரண்யம் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. ஆனால், போதிய பாதுகாப்பு, பராமரிப்பு இல்லாத நிலையில் அந்த தாழி தற்போது கோட்டாட்சியா் அலுவலகமாக (பழைய வட்டாட்சியா் அலுவலகம்) செயல்படும் கட்டடத்தில் உள்ளது. இவற்றை முறையாக பராமரிக்காவிட்டால் குப்பைகளோடு காணமல் போகவும், வீணாகவும் வாய்ப்புள்ளது. எனவே, தொன்மையான செட்டிப்புலம் முதுமக்கள் தாழியை பாதுகாப்பாக பராமரிக்கவும், அதன் தொன்மையை அறியவும் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com