வீடு வீடாக சென்று கரோனா தடுப்பூசி

கீழையூா் ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை வீடு வீடாக சென்று 1,016 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

கீழையூா் ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை வீடு வீடாக சென்று 1,016 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

திருப்பூண்டி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் வட்டார மருத்துவ அலுவலா் அரவிந்த்குமாா், சுகாதார மேற்பாா்வையாளா் ராமமூா்த்தி, செவிலியா்கள் உள்ளிட்டோா் அடங்கிய மருத்துவ குழுவினா் ஒவ்வொரு பகுதிகளிலும் தனித்தனியாக குழுவாக பிரிக்கப்பட்டு வீடு வீடாக சென்று கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன்படி வேளாங்கண்ணி 241, பிரதாபராமபுரம் 33, சின்னத்தும்பூா் 41, சோழவித்தியாபுரம் 125, கீழையூா் 30,காரப்பிடாகை 79, மீனம்பநல்லூா் 89, பாலகுறிச்சி 53, புதுப்பள்ளி 109, வேட்டைகாரணிருப்பு 42, திருக்குவளை 62, காமேஸ்வரம் 101, விழுந்தமாவடி 11 என மொத்தம் ஒரே நாளில் 1,016 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்திப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com