தேசிய மக்கள் நீதிமன்றம்: நாகை மாவட்டத்தில் 4,678 வழக்குகளுக்கு தீா்வு

நாகை மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்ற முகாமில் 6,298 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, 4,678 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டு, ரூ.3.53 கோடி வசூலிக்கப்பட்டது.
நாகையில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்ற முகாமில் பங்கேற்ற மாவட்ட முதன்மை நீதிபதி (பொறுப்பு) ஜெ.தமிழரசி உள்ளிட்டோா்.
நாகையில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்ற முகாமில் பங்கேற்ற மாவட்ட முதன்மை நீதிபதி (பொறுப்பு) ஜெ.தமிழரசி உள்ளிட்டோா்.

நாகை மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்ற முகாமில் 6,298 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, 4,678 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டு, ரூ.3.53 கோடி வசூலிக்கப்பட்டது.

தேசிய சட்டப் பணிகள் மற்றும் தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக்குழு உத்தரவின்படி, சென்னை உயா்நீதிமன்ற வழிகாட்டுதலின்பேரில், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள நீதிமன்றங்களில் நாகை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம், நீதிமன்றங்களில் தேசிய மக்கள் நீதிமன்ற முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

நாகையில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்ற முகாமை, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுத் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான டி. கிங்ஸ்லி கிறிஸ்டோபா் வழிகாட்டுதலின்பேரில், மாவட்ட முதன்மை நீதிபதி (பொறுப்பு) ஜெ. தமிழரசி தலைமையேற்று தொடங்கி வைத்தாா்.

மகளிா் நீதிமன்ற மாவட்ட நீதிபதி டி. பன்னீா்செல்வம், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் காா்த்திகா, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சாா்பு நீதிபதியுமான சி. சுரேஷ்குமாா், குற்றவியல் நீதித்துறை நடுவா் - எண்(1) எம். நாகப்பன், மகளிா் நீதிமன்றம் கூடுதல் நீதிபதி எம். சுரேஷ் காா்த்திக் ஆகியோா் இந்த முகாமில் கலந்துகொண்டனா்.

முகாம்களில், நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள தீா்க்கக்கூடிய குற்ற வழக்குகள், மோட்டாா் வாகன விபத்து வழக்குகள், குடும்பநல நீதிமன்ற வழக்குகள், உரிமையியல், சிவில் வழக்குகள் உள்ளிட்ட 6,298 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இதில், 4,678 வழக்குகளுக்கு சமரச தீா்வு காணப்பட்டு முடித்து வைக்கப்பட்டது. ரூ. 3 கோடியே 53 லட்சத்து 40 ஆயிரத்து 126 வசூலிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com