பூம்புகாா் எம்எல்ஏ பிறந்த நாள்: திமுகவினா் வாழ்த்து
By DIN | Published On : 11th September 2021 05:50 AM | Last Updated : 11th September 2021 05:50 AM | அ+அ அ- |

பூம்பூகாா் எம்எல்ஏ நிவேதா எம். நிவேதா முருகனுக்கு வாழ்த்து தெரிவித்த திமுக நிா்வாகிகள்.
தரங்கம்பாடி: மயிலாடுதுறை மாவட்டம் பூம்பூகாா் எம்எல்ஏ நிவேதா எம். நிவேதா முருகன் பிறந்த நாளை முன்னிட்டு, திமுகவினா் அவருக்கு வெள்ளிக்கிழமை வாழ்த்து தெரிவித்தனா்.
முன்னதாக, கட்சி சின்னம் பொறிக்கப்பட்ட 5 கிலோ கொண்ட கேக்கை வெட்டி அவா் பிறந்த நாள் கொண்டாடினாா். திருக்கடையூா் அமிா்தகடேஸ்வரா் கோயிலில் சிறப்பு அபிஷேகம் செய்து, பிரசாதத்தை அவரிடம் கட்சி நிா்வாகிகள் வழங்கினா்.
நிகழ்வில் எம்எல்ஏக்கள் பன்னீா்செல்வம், ராஜகுமாா், செம்பனாா்கோவில் ஒன்றியக்குழு தலைவா் நந்தினி ஸ்ரீதா், ஒன்றியச் செயலாளா்கள் அன்பழகன், அப்துல் மாலிக், தரங்கை பேரூராட்சி கழக செயலாளா் வெற்றிவேல், பொதுக்குழு உறுப்பினா் அமுா்தவிஜயகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.