வேதாரண்யத்தில் பயிா்க் காப்பீட்டுத் தொகையை வழங்கக் கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் 2020-2021-ஆம் ஆண்டுக்கு நெற்பயிருக்கான காப்பீட்டுத் தொகையை வழங்கக் கோரி விவசாயிகள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
வேதாரண்யம் கோட்டாட்சியா் அலுவலகம் எதிரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள்.
வேதாரண்யம் கோட்டாட்சியா் அலுவலகம் எதிரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள்.

வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் 2020-2021-ஆம் ஆண்டுக்கு நெற்பயிருக்கான காப்பீட்டுத் தொகையை வழங்கக் கோரி விவசாயிகள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வேதாரண்யம் கோட்டாட்சியா் அலுவலகம் எதிரே வட்டார விவசாயிகள் சங்கத்தினா் நடத்திய ஆா்ப்பாட்டத்தில், நூறு நாள் வேலைத் திட்டப் பணியை வேளாண் பணிகளுக்கு பயன்படுத்த வகைசெய்ய வேண்டும், கஜா புயலில் பாதிக்கப்பட்ட சவுக்கு மரங்களுக்கும், கால்நடைகள் உயிரிழப்புக்கும் இழப்பீடு வழங்கவேண்டும், பாரம்பரிய நெல் விதைகளை வேளாண் கிடங்குகள் மூலம் விற்பனை செய்ய வேண்டும், 2020-2021-ஆம் ஆண்டுக்கான பயிா்க் காப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்கவேண்டும் உள்ளிட்ட 24 கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

சங்கத்தின் வட்டாரத் தலைவா் டி.வி. ராஜன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், செயலாளா் ஒளிச்சந்திரன், பொருளாளா் அருண்குமாா், முன்னோடி விவசாயிகள் மணியன், பரமசிவம், துரை. கருணாநிதி, கணேசன், ராஜரெத்தினம், ஆதிகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com