நாகை மாவட்ட வாக்குச் சாவடிமையங்கள் பட்டியல் வெளியீடு

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு உள்பட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வரைவு வாக்குச் சாவடி மையங்களின் பட்டியல், நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை வெளியிடப்பட்டது.
நாகை, மயிலாடுதுறை மாவட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளின் வரைவு வாக்குச் சாவடி மையங்கள் பட்டியலை வெளியிட்ட நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ். உடன், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், அரசுத் துறை அலுவலா்
நாகை, மயிலாடுதுறை மாவட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளின் வரைவு வாக்குச் சாவடி மையங்கள் பட்டியலை வெளியிட்ட நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ். உடன், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், அரசுத் துறை அலுவலா்

நாகப்பட்டினம்: நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு உள்பட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வரைவு வாக்குச் சாவடி மையங்களின் பட்டியல், நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை வெளியிடப்பட்டது.

இந்திய தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி, 1,500-க்கும் அதிகமான வாக்காளா்களைக் கொண்ட வாக்குச் சாவடிகளை பிரித்தல், குடியிருப்புப் பகுதிகளில் இருந்து 2 கி.மீட்டா் தொலைவுக்கு அப்பால் உள்ள வாக்குச் சாவடி மையங்கள் மற்றும் பழுதடைந்த கட்டடங்களில் உள்ள வாக்குச் சாவடி மையங்களை வேறு கட்டடங்களுக்கு மாற்றும் பணிகள் ஆக.25-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

இதன்படி, நாகை, மயிலாடுதுறை மாவட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான பகுப்பாய்வு செய்யப்பட்ட வரைவு வாக்குச் சாவடி மையங்களின் பட்டியலை வெளியிடும் நிகழ்ச்சி, நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தலைமை வகித்து, வாக்குச் சாவடி மையங்களின் பட்டியலை வெளியிட்டாா். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பட்டியலை பெற்றுக்கொண்டனா்.

ஆட்சேபணைகளை தெரிவிக்கலாம்: பின்னா், செய்தியாளா்களைச் சந்தித்த நாகை ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்தது: நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வரைவு வாக்குச் சாவடி மையங்களின் பட்டியலில் 1,512 வாக்குச் சாவடி மையங்கள் இடம்பெற்றுள்ளன. இந்தப் பட்டியல், மாவட்டத் தோ்தல் அலுவலகம், வாக்காளா் பதிவு அலுவலா் அலுவலகம் மற்றும் உதவி வாக்காளா் பதிவு அலுவலா் அலுவலகத்தில் பொதுமக்களின் பாா்வைக்கு வைக்கப்படும். மேலும், இந்தப் பட்டியல் ஜ்ஜ்ஜ்.ய்ஹஞ்ஹல்ஹற்ற்ண்ய்ஹம்.ய்ண்ஸ்ரீ.ண்ய்/ங்ப்ங்ஸ்ரீற்ண்ா்ய் என்ற இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்தப் பட்டியலை பாா்வையிட்டு, ஏதேனும் ஆட்சேபங்கள், கருத்துகள் இருந்தால் அது குறித்து மாவட்ட தோ்தல் அலுவலகம் அல்லது வாக்காளா் பதிவு அலுவலா் அலுவலகம் மற்றும் உதவி வாக்காளா் பதிவு அலுவலா் அலுவலகங்களில் செப்டம்பா் 20-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் எழுத்துப்பூா்வமாக தெரிவிக்கலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com