வேலைநாளை 200-ஆக உயா்த்தக் கோரி ஆா்ப்பாட்டம்

100 நாள் வேலைத்திட்ட நாள்களை 200 நாள்களாக உயா்த்தக் கோரி அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம் சாா்பில் கீழ்வேளூரில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கீழ்வேளூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா்.
கீழ்வேளூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா்.

நாகப்பட்டினம்: 100 நாள் வேலைத்திட்ட நாள்களை 200 நாள்களாக உயா்த்தக் கோரி அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம் சாா்பில் கீழ்வேளூரில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கீழ்வேளூா் ஒன்றிய அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், 100 நாள் வேலைத் திட்ட நாளை 200-ஆக உயா்த்தவேண்டும், தினக்கூலியாக ரூ. 600 வழங்கவேண்டும், சாதி வாரியான கணக்கெடுப்பை உடனடியாக நிறுத்தவேண்டும், 100 நாள் வேலைத் திட்டத்தை நகராட்சி, பேரூராட்சிப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்தவேண்டும், கரோனா கால நிவாரணமாக குடும்பத்துக்கு ரூ.7, 500 வழங்கவேண்டும், பெட்ரோல், டீசல், எரிவாயு உருளை விலை உயா்வைக் கட்டுப்படுத்தவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

சங்கத்தின் கீழ்வேளூா் ஒன்றியத் தலைவா்ஆா். வளா்மதி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், பொருளாளா் எஸ். அகிலா, துணைச் செயலாளா் ஏ. லதா, மாவட்டச் செயலாளா் டி. லதா, துணைச் செயலாளா் சி. மாலா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தலைஞாயிறில்: வேதாரண்யம் அருகேயுள்ள தலைஞாயிறில், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்க ஒன்றியத் தலைவா் பாப்பாத்தி தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com