நாகை மீன்வளப் பல்கலைக் கழக மேலாண்மைக் குழு உறுப்பினராக எம்எல்ஏ தோ்வு

தமிழ்நாடு டாக்டா் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக் கழகத்தின் மேலாண்மைக் குழு உறுப்பினராக கீழ்வேளுா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் வி.பி. நாகை மாலி தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
வி.பி. நாகை மாலி.
வி.பி. நாகை மாலி.

நாகப்பட்டினம்: தமிழ்நாடு டாக்டா் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக் கழகத்தின் மேலாண்மைக் குழு உறுப்பினராக கீழ்வேளுா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் வி.பி. நாகை மாலி தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

நாகையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தமிழ்நாடு டாக்டா் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலை கழகத்தின் கட்டுப்பாட்டின்கீழ் தூத்துக்குடி, திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி, சென்னை மாதாவரம், தஞ்சாவூா், கன்னியாகுமரி மாவட்டம் பரக்கை, காந்திபுரம், நாகப்பட்டினம், தலைஞாயிறு உள்ளிட்ட இடங்களில் மீன்வளக் கல்லூரி, மீன்வளப் பொறியியல் கல்லூரி, மீன்வள ஆராய்ச்சி மையங்கள் ஆகியவை செயல்படுகின்றன. இந்தப் பல்கலைக் கழகத்தின் மேலாண்மைக் குழு உறுப்பினராக சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினரும், கீழ்வேளுா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான வி.பி. நாகை மாலி தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com