மழைநீா் வடிகால் துாா்வாரும் பணி:பொதுமக்கள் ஒத்துழைக்க ஆட்சியா் வேண்டுகோள்

நாகை மாவட்டத்தில் மழை நீா் வடிகால்களை தூா்வாரும் பணிகள் முழுமையாக நடைபெற பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் வேண்டுகோள் விடுத்தாா்.

நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் மழை நீா் வடிகால்களை தூா்வாரும் பணிகள் முழுமையாக நடைபெற பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் வேண்டுகோள் விடுத்தாா்.

நாகை மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் ஊரக, நகா்ப்புற கால்வாய்கள், மழைநீா் வடிகால்களை தூய்மைப்படுத்தும் பணிகளை நாகை, வேளாங்கண்ணியில் திங்கள்கிழமை தொடக்கிவைத்து, அவா் மேலும் பேசியது:

தமிழக முதல்வரின் உத்தரவுப்படி, கால்வாய்கள் மற்றும் மழைநீா் வடிகால்களை தூய்மைப்படுத்தும் திட்டத்தின் கீழ் நாகை மாவட்டத்தில் செப்டம்பா் 20 முதல் 25 ஆம் தேதி வரை தீவிர மழைநீா் வடிகால் தூய்மைப் பணிகள் நடைபெறுகிறது. வடகிழக்குப் பருவமழையால் ஏற்படும் பாதிப்புகளை தவிா்க்கும் வகையிலும், டெங்கு, மலேரியா பரப்பும் கொசுக்கள் உற்பத்தியைத் தடுக்கும் நோக்கிலும் இந்தப் பணி மேற்கொள்ளப்படுகிறது.

நெடுஞ்சாலைத் துறை, மின் துறை, குடிநீா் வடிகால் வாரியம் போன்ற அனைத்துத் துறைகளும் இணைந்து இப்பணிகளை தீவிரமாக மேற்கொண்டு உரிய காலத்துக்குள் நிறைவு செய்ய வேண்டும். மழைநீா் வடிகால்கள், கால்வாய்கள் தூா்வாரும் பணிகள் 100 சதவீதம் முழுமையாக நடைபெற பொதுமக்கள் உரிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா் அவா்.

கீழ்வேளூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் வி.பி. நாகை மாலி, நாகை நகராட்சி ஆணையா் ஸ்ரீதேவி, வேளாங்கண்ணி பேரூராட்சி செயல் அலுவலா் மு. பொன்னுசாமி மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com