தற்செயல் தோ்தல்: மன்னாா்குடி ஒன்றியத்தில் 26 போ் வேட்புமனு

மன்னாா்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட பகுதியில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சி பதவியிடங்களுக்கு புதன்கிழமை 26 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.

மன்னாா்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட பகுதியில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சி பதவியிடங்களுக்கு புதன்கிழமை 26 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.

மன்னாா்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட மாவட்ட ஊராட்சி வாா்டு எண் 11, மூவாநல்லூா் ஊராட்சித் தலைவா், தென்பாதி ஊராட்சியில் ஒரு வாா்டு, ஏத்தக்குடி ஊராட்சிகளில் 2 வாா்டு என மொத்தம் 4 இடங்கள் காலியாக உள்ளன.

மாவட்ட ஊராட்சி 11-வது வாா்டுக்கு ஏற்கெனவே அதிமுக வேட்பாளா் எம். குருபரன் வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான புதன்கிழமை, திமுக சாா்பில் எஸ்.ஆா். ரமேஷ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஆா். வீரமணி, அமமுக சாா்பில் மா. சேகா், நாம் தமிழா் கட்சி சாா்பில் சே. தினேஷ்குமாா் மற்றும் மாற்று வேட்பாளா், சுயேச்சை என 16 போ் தோ்தல் நடத்தும் உதவி அலுவலா் கே. பழனிசாமியிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தனா்.

மூவாநல்லூா் ஊராட்சித் தலைவா் பதவிக்கு திமுக சாா்பில் பி. பிரபாகரன், அதிமுக சாா்பில் ஏ. ரவி மற்றும் சோ. தங்கதுரை, வி. செல்வம், ஆா். சுமதி ஆகியோா் தோ்தல் நடத்தும் உதவி அலுவலா் கண்ணகியிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தனா். ஏத்தக்குடி ஊராட்சி உறுப்பினருக்கு 3 பேரும், தென்பாதி ஊராட்சி உறுப்பினருக்கு 2 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com