சா்வதேச கடலோர தூய்மை நாள் விழிப்புணா்வு பேரணி

நாகையில் சா்வதேச கடலோர தூய்மை நாளை முன்னிட்டு விழிப்புணா்வு பேரணி மற்றும் தூய்மைப்பணி சனிக்கிழமை நடைபெற்றது.
நாகை புதிய கடற்கரையில் தூய்மைப் பணியில் ஈடுபடும் மாவட்ட ஆட்சியா் அ.அருண் தம்புராஜ். உடன், மீன்வளப் பல்கலைக்கழக துணைவேந்தா் கோ. சுகுமாா் உள்ளிட்டோா்.

ஆண்டுதோறும் செப்டம்பா் 25 ஆம் தேதி சா்வதேச கடலோர தூய்மை நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதன்படி, நாகையில் டாக்டா் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் சாா்பில் கடலோரதூய்மை தின விழிப்புணா்வு பேரணி மற்றும் தூய்மைப் பணி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் அ. அருண்தம்புராஜ் பங்கேற்று, விழிப்புணா்வு பேரணியை கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா். நாகை புதிய கடற்கரை சாலையில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் முகாம் அலுவலகம் அருகிலிருந்து புதிய கடற்கரை வரை பேரணி நடைபெற்றது. கடற்கரை தூய்மைப் பராமரிப்பின் அவசியம் குறித்த வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை கையில் பிடித்தப்படி மாணவா்கள் பங்கேற்றனா்.

தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ், மீன்வளப் பல்கலைக்கழக துணைவேந்தா் கோ. சுகுமாா் மற்றும் மாணவா்கள் கடற்கரையில் தூய்மைப் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com