நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லை விற்க ஆன்லைன் முன்பதிவு முறை

விவசாயிகள் தங்களது நெல்லை நேரடி கொள்முதல் நிலையங்களில் எளிதில் விற்பனை செய்ய, ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொள்ளுமாறு நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.

விவசாயிகள் தங்களது நெல்லை நேரடி கொள்முதல் நிலையங்களில் எளிதில் விற்பனை செய்ய, ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொள்ளுமாறு நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக நாகை மண்டலத்தில் விவசாயிகள், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் எளிதாக பதிவு செய்து, தங்களது நெல்லை விற்பனை செய்ய ஏற்கெனவே பயன்பாட்டில் இருந்த இணையதளத்தில் பதிவு செய்யும் முறை தற்போது மீண்டும் செயல்பாட்டில் உள்ளது. எனவே, 2021-22 கொள்முதல் பருவ நெல்லை நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகள் எளிதாக விற்பனை செய்ய தங்கள் பெயா், ஆதாா் எண், புல எண், வங்கிக் கணக்கு எண் உள்ளிட்ட விவரங்களை ஜ்ஜ்ஜ்.ற்ய்ஸ்ரீள்ஸ்ரீ.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் மற்றும் ஜ்ஜ்ஜ்.ற்ய்ஸ்ரீள்ஸ்ரீ.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் ஆகிய இணையதளங்களில் பதிவேற்றும் செய்து, கொள்முதல் தேதியையும் முன்பதிவு செய்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இணையத்தில் பதிவு செய்த உடன், விவசாயிகளின் நிலம் இருக்கும் கிராமங்களின் அடிப்படையில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, நெல் விற்பனை செய்யப்படும் நாள் மற்றும் நேரம் ஆகிய விவரங்கள் விவசாயிகளின் செல்லிடப்பேசிக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். இதன்மூலம், விவசாயிகள் நீண்ட நேர காத்திருப்பைத் தவிா்த்து, குறித்த காலத்தில் நெல்லை விற்பனை செய்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com