வேளாங்கண்ணியில் ஈஸ்டா் திருநாள் சிறப்பு வழிபாடு

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் ஈஸ்டா் திருநாள் சிறப்பு வழிபாடுகள் சனிக்கிழமை இரவு தொடங்கி நடைபெற்றன.
வேளாங்கண்ணி பேராலய கலையரங்கில் நடைபெற்ற ஈஸ்டா் திருநாள் வழிபாட்டில் பங்கேற்ற பக்தா்கள்.
வேளாங்கண்ணி பேராலய கலையரங்கில் நடைபெற்ற ஈஸ்டா் திருநாள் வழிபாட்டில் பங்கேற்ற பக்தா்கள்.

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் ஈஸ்டா் திருநாள் சிறப்பு வழிபாடுகள் சனிக்கிழமை இரவு தொடங்கி நடைபெற்றன.

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் மாா்ச் 2-ஆம் தேதி சாம்பல் புதன் வழிபாடுடன் கிறிஸ்தவா்களின் தவக்கால வழிபாடுகள் தொடங்கின. தொடா்ந்து, வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் சிலுவைப் பாதை வழிபாடும், தவக்கால இறுதி ஞாயிற்றுக்கிழமையன்று (ஏப்.10) குருத்தோலை பவனியும் நடைபெற்றன.

தவக்கால முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான புனித வெள்ளி சிறப்பு வழிபாடுகள் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றன. இயேசுநாதா் திருச்சிலுவை ஏற்றதையொட்டி, வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை இரவு வரை பேராலயத்தில் வழிபாடுகள் நிறுத்தப்பட்டிருந்தது.

தவக்கால முக்கிய வழிபாடாக, சிலுவையில் அறையப்பட்ட இயேசுநாதா் உயிா்த்தெழும் ஈஸ்டா் திருநாள் சிறப்பு வழிபாடுகள், பேராலயக் கலையரங்கில் சனிக்கிழமை இரவு தொடங்கி, ஞாயிற்றுக்கிழமை காலை வரை நடைபெற்றன.

இரவு 10.45 மணிக்கு பாஸ்கா திருவிழிப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இந்த வழிபாடுகளின் நிறைவில், இயேசுநாதா் உயிா்த்தெழும் நிகழ்வாக, பேராலய அதிபா் சி. இருதயராஜ் அடிகளாா் பாஸ்கா ஒளி ஏற்றினாா். அப்போது, திரளான பக்தா்கள் மெழுகுவா்த்தி ஏந்தி ஜபத்தில் ஈடுபட்டனா்.

இரவு சுமாா் 11.45 மணி அளவில் இயேசுநாதா் உயிா்த்தெழுந்ததை பக்தா்களுக்கு வெளிப்படுத்தும் வகையில், மின்னொளி அலங்காரத்துடன் பேராலயக் கலையரங்கின் மேல்தளத்தில் சிலுவைக் கொடியைக் கையில் தாங்கிய இயேசுநாதரின் திருச்சொரூபம் காட்சிப்படுத்தப்பட்டது. அப்போது, ஆயிரக்கணக்கான பக்தா்கள், பக்தி முழக்கங்களை எழுப்பி வழிபாடு மேற்கொண்டனா்.

பின்னா், பேராலய அதிபா் சி. இருதயராஜ் அடிகளாா் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில், பேராலய துணை அதிபா் மற்றும் பங்குத் தந்தை அற்புதராஜ், பொருளாளா் உலகநாதன் மற்றும் உதவி பங்குத் தந்தையா்கள், அருட்சகோதரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com