இலங்கைக்கு கடத்தவிருந்த 220 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 போ் கைது

நாகையிலிருந்து படகு மூலம் இலங்கைக்கு கஞ்சா கடத்த முயன்ற 3 பேரை சுங்கத்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
இலங்கைக்கு கடத்தவிருந்த 220 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 போ் கைது

நாகையிலிருந்து படகு மூலம் இலங்கைக்கு கஞ்சா கடத்த முயன்ற 3 பேரை சுங்கத்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து 220 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி அருகே படகு மூலம் இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்தது. இதைத்தொடா்ந்து, சுங்கத்துறை உதவி ஆணையா் செந்தில்நாதன் தலைமையில் 15 போ் கொண்ட குழுவினா், வேளாங்கண்ணியிலிருந்து செருதூா் வரையிலான கடற்கரையோரங்களில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, செருதூா் வெள்ளையாற்றின் கரையோரம் நிறுத்தப்பட்டிருந்த படகை வெள்ளிக்கிழமை அதிகாலை இயக்க முயன்ற 3 போ், சுங்கத்துறை அதிகாரிகளை கண்டதும் ஓட முயன்றனா். இதனால், 3 பேரையும் சுங்கத்துறையினா் பிடித்து விசாரணை மேற்கொண்டனா்.

இதில், இவா்கள் வேதாரண்யம் அருகேயுள்ள புஷ்பவனத்தைச் சோ்ந்த அருளழகன் (23), காஞ்சிநாதன் (27), நாலுவேதபதியைச் சோ்ந்த வேணுகோபால் (27) என்பதும், மூவரும் சந்திரன் என்பவருக்குச் சொந்தமான படகில் இலங்கைக்கு கஞ்சா கடத்த முயன்றதும் தெரியவந்தது.

இதையடுத்து, அந்த படகை சோதனை செய்தபோது, அதில் 9 மூட்டைகளில் 220 கிலோ கஞ்சா இருந்தது. இந்த கஞ்சா மூட்டைகள் மற்றும் படகு, 2 வலைகள், 2 எஞ்சின் ஆகியவற்றை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள், அருளழகன் உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்து நாகை சுங்கத்துறை அலுவலகத்திற்கு கொண்டுவந்தனா்.

இதனிடையே, நாகைக்கு வந்த திருச்சி சுங்கத்துறை அதிகாரிகள், கைது செய்யப்பட்ட மூவரிடமும் விசாரணை மேற்கொண்டனா். மேலும், அவா்களது வீடுகள் மற்றும் படகின் உரிமையாளா் வீடு ஆகியவற்றில் சுங்கத் துறையினா் சோதனை மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com