வேதாரண்யம்: 18 கிராம உதவியாளர் பணிக்கு 1,306 பேர் தேர்வு எழுதினர்

வேதாரண்யம் பகுதியில் கிராம நிர்வாக உதவியாளர் பணிக்கு காலியாக உள்ள 18 இடங்களுக்கு 1,306 விண்ணப்பத்தார்கள் இன்று(டிச.5)எழுத்து தேர்வு எழுதினர்.
செம்போடை ஆர்.வி.கல்லூரியில் தேர்வு எழுதியோர்.
செம்போடை ஆர்.வி.கல்லூரியில் தேர்வு எழுதியோர்.

நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் கிராம நிர்வாக உதவியாளர் பணிக்கு காலியாக உள்ள 18 இடங்களுக்கு 1,306 விண்ணப்பத்தார்கள் இன்று
(டிச.5)எழுத்து தேர்வு எழுதினர்.

வேதாரண்யம் வருவாய் வட்டத்துக்குள்பட்ட கிராமங்களில் கிராம நிர்வாக உதவியாளர் பணி 18 இடங்களில் காலியாக உள்ளது. 
இந்த இடத்தில் பணியாற்ற 1306 பேர் விண்ணப்பபித்து இருந்தனர்.

விண்ணப்பதாரருக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதி 5 ஆம் வகுப்பு என்றபோதிலும் பட்டப்படிப்பு படித்தவர்களும் விண்ணப்பித்தனர்.

இந்த நிலையில், வேதாரண்யம் எஸ்.கே.சுப்பையா அரசு மேல்நிலைப் பள்ளி, குருகுலம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் செம்போடை ஆர்.வி.கல்லூரி ஆகிய இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்வு மையங்களில் விண்ணப்பதார்கள் தேர்வு எழுதினர்.

இந்த பணியை வருவாய் கோட்டாட்சியர் மை.ஜெயராஜ பெளலின், வட்டாட்சியர் இரா.ஜெயசீலன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com