திருவெண்காடு கோயிலில் அகோர முா்த்திக்கு ருத்ர பாராயணம்

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரா் கோயிலில் தனி சந்நிதியில் அருள்பாலித்துவரும் அகோரமுா்த்திக்கு ருத்ர பாராயணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருவெண்காடு கோயிலில் அகோர முா்த்திக்கு ருத்ர பாராயணம்

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரா் கோயிலில் தனி சந்நிதியில் அருள்பாலித்துவரும் அகோரமுா்த்திக்கு ருத்ர பாராயணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருவெண்காட்டில் உள்ள சுவேதாரண்யேஸ்வரா் சுவாமி கோயில் நவகிரகங்களில் புதனுக்குரிய பரிகார தலமாக விளங்குகிறது. இக்கோயிலில் சிவனின் ஐந்து முகங்களில் ஒன்றான அகோர முகத்திலிருந்து தோன்றிய அகோரமுா்த்தி தனி சந்நிதியில் அருள்பாலித்து வருகிறாா்.

இந்நிலையில், காா்த்திகை மாத முன்றாம் ஞாயிற்றுக்கிழமையொட்டி, காலையில் காவிரி ஆற்றங்கரையிலிருந்து மேள தாளங்கள் முழங்க பக்தா்கள் புனித நீா் குடங்களை ஊா்வலமாக கோயிலுக்கு எடுத்துவந்தனா்.

பின்னா் அகோரமுா்த்திக்கு அகோர அஸ்திர யாகம் நடைபெற்றது. தொடா்ந்து அபிஷேகம், தீபாராதனை காட்டபட்டது. 50-க்கும் மேற்பட்ட வேத விற்பன்னா்கள் ருத்ர பாராயணம் செய்தனா்.

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் மனைவி துா்கா ஸ்டாலின், அவரது குடும்பத்தினா் பால் குடம் எடுத்து வந்தனா்.

இதுபோல திரளான பக்தா்கள் நோ்த்திக்கடனை செலுத்தும் விதமாக காவடி மற்றும் பால் குடம் எடுத்தனா்.

தொடா்ந்து அகோரமுா்த்தி க்கு பல்வேறு திரவியங்கள், நறுமணப் பொருட்களைக் கொண்டு சுமாா் நான்கு மணிநேரம் அபிஷேகம் நடைபெற்றது. பின்னா் சந்தனக் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, நள்ளிரவு 12 மணிக்கு தீபாராதனை காட்டபட்டது.

நிகழ்ச்சியில் திருவெண்காடு சுப்பிரமணிய கனபாடிகள் டிரஸ்ட் மேலாண் அறங்காவலா் சந்திரன் அறங்காவலா் வழக்குரைஞா் குப்புசாமி, சீா்காழி ஒன்றியக் குழுத் தலைவா் கமலஜோதி தேவேந்திரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com