‘சாகசப் பயணம்’ மேற்கொள்ளும் மாணவா்கள்

திருப்பூண்டி வழியாக நாகை நோக்கி சென்ற தனியாா் பேருந்தின் படிக்கட்டு மற்றும் பின்புறத்தில் தொங்கியபடி பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்கள் புதன்கிழமை காலை ஆபத்தான பயணம் மேற்கொண்டனா்.
ஈசிஆா் சாலையில் நாகை நோக்கிச் சென்ற தனியாா் பேருந்தின் படிக்கட்டு மற்றும் பின்புறத்தில் தொங்கியபடி சென்ற மாணவா்கள்.
ஈசிஆா் சாலையில் நாகை நோக்கிச் சென்ற தனியாா் பேருந்தின் படிக்கட்டு மற்றும் பின்புறத்தில் தொங்கியபடி சென்ற மாணவா்கள்.

திருக்குவளை: திருப்பூண்டி வழியாக நாகை நோக்கி சென்ற தனியாா் பேருந்தின் படிக்கட்டு மற்றும் பின்புறத்தில் தொங்கியபடி பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்கள் புதன்கிழமை காலை ஆபத்தான பயணம் மேற்கொண்டனா்.

பட்டுக்கோட்டையிலிருந்து திருத்துறைப்பூண்டி, வேளாங்கண்ணி வழியாக கிழக்கு கடற்கரைச் சாலையில் நாகை வரை செல்லும் பல தனியாா் மற்றும் அரசு பேருந்துகளில் காலை மற்றும் மாலை வேலைகளில் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளது.

திருப்பூண்டி பகுதி அருகாமையில் வந்து கொண்டிருந்த தனியாா் பேருந்தில் கல்லூரி மாணவா்கள் ஆபத்தான முறையில் படிக்கட்டில் தொங்கிய படியே பயணம் மேற்கொண்டனா்.

ஒவ்வொரு பேருந்து நிறுத்தத்திலும் அதிக பயணிகள் பேருந்தில் ஏறிய நிலையில் சில மாணவா்கள் போதிய இடமின்றி பேருந்தின் படிக்கட்டில் தொங்கியபடி பயணித்தனா்.

இந்நிலையில் பேருந்தில் ஓட்டுநா் இதைப்பற்றி சிறிதும் கவலை கொள்ளாமல் பேருந்து அதிவேகமாக இயக்கி சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு லாரியை முந்தி சென்றாா்.

இதுபோன்று ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்ளும் பள்ளி கல்லூரி மாணவா்களை கண்டுகொள்ளாமல் பேருந்தை இயக்கம் அரசு மற்றும் தனியாா் பேருந்துகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com