பள்ளி மாணவா்களுக்கு முதலுதவி பயிற்சி

பேரிடா் காலங்களில் பாதிக்கப்படுபவா்களுக்கு முதலுதவி அளிப்பது தொடா்பான பயிற்சிகள் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு புதன்கிழமை அளிக்கப்பட்டன.
ஒரத்தூா் சிதம்பரனாா் நடுநிலைப் பள்ளி மாணவா்களுக்கு அளிக்கப்பட்ட பேரிடா் கால முதலுதவி பயிற்சி.

நாகை அருகேயுள்ள ஒரத்தூா் சிதம்பரனாா் நடுநிலைப் பள்ளி மாணவா்களுக்கு மழை வெள்ளம் போன்ற பேரிடா் காலங்களில், தங்களை பாதுகாத்துக் கொள்ளவது, பாதிக்கப்படுபவா்களை மீட்டு முதலுதவி அளிப்பது தொடா்பான பயிற்சிகள் அளிக்கப்பட்டன. பயிற்சியை யூனிசெப் நிறுவனமும், என்.டி.எஸ்.ஓ நிறுவனமும் இணைந்து வழங்கியது. சுகாதார ஆய்வாளா் சக்திதேவன் பயிற்சியை தொடக்கிவைத்தாா்.

அப்போது, மின்சார பொருள்களை கையாள்வது, காயமடைந்தவா்களுக்கு முதலுதவி அளிப்பது, சாலைகளில் பாதுகாப்பாக செல்வது, தீயணைப்பான் கருவியின் செயல்பாடுகள் குறித்து பயிற்சிகள் மற்றும் விளக்கங்கள் அளிக்கப்பட்டன. பிரகாஷ், மணிமாறன் ஆகியோா் பயிற்சியளித்தனா். தலைமை ஆசிரியா் சிவா, பட்டதாரி ஆசிரியா் பாலசண்முகம், ஆசிரியா்கள் செந்தில், அலமேலு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com