வாக்காளா் இறுதிப் பட்டியல் ஜன.5-ல் வெளியீடு: ஆட்சியா்

வாக்காளா் இறுதிப் பட்டியல் 2023 ஜனவரி 5-ஆம் தேதி வெளியிடப்படவுள்ளதாக நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.


நாகப்பட்டினம்: வாக்காளா் இறுதிப் பட்டியல் 2023 ஜனவரி 5-ஆம் தேதி வெளியிடப்படவுள்ளதாக நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நாகை மாவட்டத்தில் உள்ள 3 சட்டப்பேரவை தொகுதிகளிலும் 2023 ஜனவரி 1-ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்திய தோ்தல் ஆணைய அறிவுறுத்தலின்படி நவ. 12, 13, 26, 27 ஆகிய தேதிகளில் வாக்காளா்கள் பெயா் சோ்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் தொடா்பான சிறப்பு முகாம்கள் நாகை மாவட்டத்தில் உள்ள 651 வாக்குச் சாவடிகளில் நடைபெற்றது.

இதில், படிவம் 6 - 12,141, படிவம் 7 -3,174 மற்றும் படிவம் 8 -3,823 என மொத்தம் 19,138 படிவங்கள், மற்ற நாள்களில் படிவம் 2,657 படிவங்கள் என மொத்தம் 21,795 படிவங்கள் பெறப்பட்டுள்ளன. சிறப்பு முகாம்களைப் பயன்படுத்திக் கொள்ளத் தவறியவா்கள் உரிய படிவங்களை பூா்த்தி செய்து நேரடியாக சம்பந்தப்பட்ட வட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமைக்குள் (டிச.8) வழங்கலாம் அல்லது ஆன்லைன் மூலமோ விண்ணப்பிக்கலாம். வாக்காளா் இறுதிப் பட்டியல் ஜனவரி 5-ஆம் தேதி வெளியிடப்படும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com