திருக்குவளையில் கருணாநிதி அருங்காட்சியம்: ஆட்சியர் ஆய்வு

நாகப்பட்டினம் மாவட்டம், கீழையூர் ஒன்றியம், திருக்குவளை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்ற வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டத்திற்கு நாகை மாவட்ட ஆட்சியர் அ. அருண்தம்புராஜ் தலைமை வகித்தார
நாகை மாவட்ட ஆட்சியர் அ. அருண் தம்புராஜ்
நாகை மாவட்ட ஆட்சியர் அ. அருண் தம்புராஜ்

நாகப்பட்டினம் மாவட்டம், கீழையூர் ஒன்றியம், திருக்குவளை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்ற வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டத்திற்கு நாகை மாவட்ட ஆட்சியர் அ. அருண்தம்புராஜ் தலைமை வகித்தார்.

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பெ. பெரியசாமி முன்னிலை வகித்தார். முன்னதாக திருக்குவளை ஊராட்சி மன்ற தலைவர் இல. பழனியப்பன் வரவேற்புரை வழங்கினார். இறுதியாக வார்டு உறுப்பினர் என். சிங்காரவேல் நன்றியுரை கூறினார்.

ஆய்வுக் கூட்டத்தை தொடர்ந்து, திருக்குவளையில் கடந்த மாதம் ஆய்வு பணிகளை மேற்கொண்ட இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, திருக்குவளையில் கலைஞரின் சாதனையை போற்றும் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

அமைச்சரின் அறிவிப்பை தொடர்ந்து திருக்குவளையில் கலைஞரின் இல்லம், சுற்றுப்புற சாலை, உள்ளிட்ட பகுதிகளில் நடந்த ஆய்வில் அருங்காட்சியகம் அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. மூத்த அரசியல்வாதியாக இருந்து மறைந்த தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞரின் வாழ்வியல், அவருடைய அரசியல் சாதனை, மக்களுக்கு அறிவித்த திட்டங்கள், என பல்வேறு நினைவுகளை விளக்கும் வகையின் நவீன அருங்காட்சியகம் அமைய உள்ளது.

நவீன தொழில் நுட்ப வசதிகளுடன் அருங்காட்சியகம் பொதுமக்களின் பார்வைக்காக அமைய உள்ள நிலையில், கலைஞரின் இல்லத்திற்கு வரவுள்ள சாலைகளும் மேம்படுத்தப்பட உள்ளன. கலைஞரின் நூறாம் ஆண்டு பிறந்தநாள்  2024 ஆம் ஆண்டு கொண்டாடப்படுவதையொட்டி,  அருங்காட்சியம் அமைக்கும் பணிகள் விரைவில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் வேதாரண்யம் வருவாய்  கோட்டாட்சியர் து.சு.துரைமுருகன், செயற்பொறியாளர் என். பசுபதி(ஊரக வளர்ச்சி), பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் இ. மோகனசுந்தரம் (கட்டிடம்), உதவி பொறியாளர் ஆர். வேலுசாமி, சுற்றுலாத் துறை அலுவலர் மாதவன், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ராணி, கீழையூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எஸ்.ராஜகுமார்(வட்டார ஊராட்சி), கி.செந்தில்(கிராம ஊராட்சி), திருக்குவளை வட்டாட்சியர் கு.சிவகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com