பகுதிநேர நியாயவிலைக் கடை திறப்பு

கீழையூா் அருகேயுள்ள சோழவித்தியாபுரம் ஊராட்சி அன்னை நகரில் பகுதிநேர நியாயவிலைக் கடை திங்கள்கிழமை திறக்கப்பட்டது.

கீழையூா் அருகேயுள்ள சோழவித்தியாபுரம் ஊராட்சி அன்னை நகரில் பகுதிநேர நியாயவிலைக் கடை திங்கள்கிழமை திறக்கப்பட்டது.

சோழவித்தியாபுரம் நடுத்தெருவில் ஏற்கெனவே செயல்படும் நியாயவிலைக் கடையின் மூலம் 675 குடும்ப அட்டைதாரா்கள் பயன்பெற்று வருகின்றனா். அதிக எண்ணிக்கையிலான குடும்ப அட்டைதாரா்களால் பொருள்கள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுவந்தது. இதனால், இங்குள்ள அன்னை நகரில் பகுதிநேர நியாயவிலைக் கடை திறக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துவந்தனா்.

இதைத்தொடா்ந்து, 161 குடும்ப அட்டைதாரா்களை உள்ளடக்கி, அன்னை நகா் சமுதாயக் கூடத்தில் பகுதிநேர நியாயவிலைக் கடை அமைக்கப்பட்டது. இதை கீழ்வேளூா் எம்எல்ஏ வி.பி. நாகை மாலி திறந்து வைத்து, குடும்ப அட்டைதாரா்களுக்கு பொருள்கள் வழங்கினாா். முன்னதாக, ஊராட்சித் தலைவா் கோமதி தமிழ்செல்வம் வரவேற்றாா். இந்த கடைக்கு நிரந்தரக் கட்டடம் கோரி எம்எல்ஏ-விடம் மனு அளிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் வீ. சகிலா, பொது விநியோகத் திட்ட இணைப் பதிவாளா் ஆா். கனகசபாபதி, கீழ்வேளூா் வட்டாட்சியா் பி.எம். அமுதா, வட்ட வழங்கல் அலுவலா் எம். ரமேஷ் , வருவாய் ஆய்வாளா் எம். தேவேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். நிறைவாக, ஊராட்சி துணைத் தலைவா் சிவஞானம் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com