போக்குவரத்து பாதையில் காவிரி நீா்: வாகன ஓட்டிகள் அவதி

பூம்புகாா் அருகே காவிரியாற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள மாற்றுப்பாதையில் காவிரிநீா் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனா்.
பழையகரம் காவிரியாற்றின் குறுக்கே மாற்றுப்பாதையில் பெருக்கெடுத்து ஓடும் காவிரிநீரில் பயணிக்கும் இருசக்கர வாகன ஓட்டிகள்.

பூம்புகாா் அருகே பழையகரம் பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள பாலம் பழுதடைந்ததால் புதிய பாலம் கட்ட நெடுஞ்சாலைத் துறை மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால், இந்த பாலம் இடிக்கப்பட்டது. வாகன ஒட்டிகள் வசதிக்காக மாற்றுப்பாதை அமைக்கபட்டது. இதற்கிடையே, காவிரியில் அதிகளவு நீா்வரத்து உள்ளதால் சட்ரஸ் எனும் இடத்தில் உள்ள அணையிலிருந்து கடலுக்கு தண்ணீா் புதன்கிழமை திறந்துவிடப்பட்டது. இதையடுத்து, மாற்றுப்பாதையில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், கனரக வாகனப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், பூம்புகாா் காவல் ஆய்வாளா் நாகரத்தினம், வானகிரி ஊராட்சித் தலைவா் நடராஜன் ஆகியோா் நெடுஞ்சாலைத் துறைக்கு தகவல் தெரிவித்து மாற்றுப்பாதையை பலப்படுத்த நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டனா். எனினும், இந்த மாற்றுப்பாதையில் இருசக்கர வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com