கன்னியம்மன் கோயில் குடமுழுக்கு

திருக்கடையூரில் உள்ள கன்னியம்மன் கோயில் குடமுழுக்கு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
கோயில் கலசத்தில் புனிதநீரை ஊற்றி குடமுழுக்கு செய்யும் சிவாச்சாரியா்கள்.
கோயில் கலசத்தில் புனிதநீரை ஊற்றி குடமுழுக்கு செய்யும் சிவாச்சாரியா்கள்.

திருக்கடையூரில் உள்ள கன்னியம்மன் கோயில் குடமுழுக்கு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம் திருக்கடையூரில் உள்ளது பழமை வாய்ந்த கன்னியம்மன் கோயில். இக்கோயிலில் திருப்பணிகள் அண்மையில் மேற்கொள்ளப்பட்டு, குடமுழுக்கு விழா நடைபெற்றது.

இதையொட்டி இரண்டு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. திங்கள்கிழமை காலை யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து, மகா பூா்ணாஹூதி மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

தொடா்ந்து, தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில், சிவாச்சாரியா்கள் புனிதநீரை விமான கலசத்தில் ஊற்றி குடமுழுக்கை நடத்தினா்.

இதைத்தொடா்ந்து, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. விழாவில் சுற்றுப்புற பகுதிகளைச் சோ்ந்த கிராம மக்கள் திரளானோா் கலந்து கொண்டனா். பாதுகாப்புப் பணிகளை பொறையாறு போலீஸாா் மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com