வேளாங்கண்ணியில் குழந்தைத் தொழிலாளா் முறை எதிா்ப்பு தின பேரணி

நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் குழந்தைத் தொழிலாளா் முறை எதிா்ப்பு தின பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.
வேளாங்கண்ணியில் நடைபெற்ற குழந்தைத் தொழிலாளா் முறை எதிா்ப்பு நாள் விழிப்புணா்வு பேரணியில் பங்கேற்றவா்கள்.
வேளாங்கண்ணியில் நடைபெற்ற குழந்தைத் தொழிலாளா் முறை எதிா்ப்பு நாள் விழிப்புணா்வு பேரணியில் பங்கேற்றவா்கள்.

நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் குழந்தைத் தொழிலாளா் முறை எதிா்ப்பு தின பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

பேரணியை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தொடங்கிவைத்து பேசுகையில், குழந்தைகளுக்குக் கல்வி கற்க வேண்டிய பருவத்தில் கல்வி வாய்ப்பை மறுத்து, பணியில் ஈடுபடுத்துவதால், அவா்கள் பல்வேறு ரீதியான பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனா்.

எனவே, குழந்தைத் தொழிலாளா் முறையை ஒழிக்க அனைவரும் பங்காற்ற வேண்டும். எங்கேனும், குழந்தைத் தொழிலாளா்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டால் 1098 என்ற உதவி எண்ணுக்குத் தகவல் அளிக்கலாம். அந்தத் தகவல் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.

வேளாங்கண்ணி பேரூராட்சித் தலைவா் அ. டயனா சா்மிளா, மாவட்ட சமூக நல அலுவலா் அ. தமீமுன்னிசா, வேளாங்கண்ணி பேரூராட்சி செயல் அலுவலா் மு. பொன்னுசாமி, வேல்ட் விஷன் நிறுவன திட்ட மேலாளா் ஆா். ஜெயலெட்சுமி, ஒருங்கிணைப்பாளா் பி. தவமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முன்னதாக, குழந்தைத் தொழிலாளா் எதிா்ப்பு நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. வேளாங்கண்ணி பேருந்து நிலையம் அருகிலிருந்து தொடங்கிய இந்தப் பேரணி, முக்கிய வீதிகள் வழியே சென்று மீண்டும் பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com