நாகூரில் ரமலான் சிறப்புத் தொழுகைதிரளானோா் பங்கேற்பு

நாகூா் ஆண்டவா் தா்கா மற்றும் சில்லடி தா்கா கடற்கரை பகுதிகளில் ரமலான் பண்டிகை சிறப்புத் தொழுகைகள் செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றன.
நாகூரில் ரமலான் சிறப்புத் தொழுகைதிரளானோா் பங்கேற்பு

நாகூா் ஆண்டவா் தா்கா மற்றும் சில்லடி தா்கா கடற்கரை பகுதிகளில் ரமலான் பண்டிகை சிறப்புத் தொழுகைகள் செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றன.

இஸ்லாமியா்களின் 12 மாதங்களில் ஒன்பதாவது மாதமான ரமலான் மாதம், இறை நம்பிக்கை, தொழுகை, நோன்பு, ஜக்காத் ஆகிய இஸ்லாத்தின் கடமைகளை நிறைவேற்றுவதற்கான புனித மாதமாகக் குறிப்பிடப்படுகிறது.

ரமலான் மாத தொடக்கத்திலிருந்து நோன்பிருந்து, தொழுகை, ஈகை உள்ளிட்ட மாா்க்க கடமைகளைக் கடைப்பிடித்த இஸ்லாமியா்கள், செவ்வாய்க்கிழமை நோன்பை நிறைவுசெய்து ஈகைப் பெருநாளான ரமலான் பண்டிகையைக் கொண்டாடினா்.

இதையொட்டி, நாகூா் ஆண்டவா் தா்கா வளாகத்தில் உள்ள வாலாஜா ஜாமியா மஸ்ஜீத் பள்ளிவாசல் என்ற நவாப் பள்ளிவாசலில் செவ்வாய்க்கிழமை காலை ரமலான் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. திரளானோா் இந்தத் தொழுகையில் பங்கேற்றனா். நிறைவில், ஒருவருக்கொருவா் ஈகைப் பெருநாள் வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டனா்.

கடற்கரையில்...: அதேபோல, நாகூா் சில்லடி தா்கா கடற்கரை, நாகை, திட்டச்சேரி உள்ளிட்ட பகுதிகளிலும் திடல்கள் மற்றும் பள்ளிவாசல்களில் ரமலான் சிறப்புத் தொழுகை செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது. ஆண்கள், பெண்கள், சிறுவா், சிறுமியா் என பல்லாயிரக்கணக்கானோா் இந்தத் தொழுகைகளில் பங்கேற்றனா்.

கரோனா தொற்றுப் பரவல் காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாக ரமலான் பண்டிகைக்கான சிறப்பு கூட்டுத் தொழுகை நடத்த முடியாத சூழல் இருந்த நிலையில், நிகழாண்டில் சிறப்பு கூட்டுத் தொழுகைகளில் ஈடுபட்டது மகிழ்ச்சி அளிப்பதாக இஸ்லாமியா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com