திருநகரி கல்யாண ரெங்கநாத பெருமாள் கோயிலில் வசந்த உற்சவம் நிறைவு

மயிலாடுதுறை மாவட்டம், திருவெண்காடு அருகேயுள்ள திருநகரி கல்யாணரெங்கநாத பெருமாள் கோயிலில் வசந்த உற்சவம் சனிக்கிழமை நிறைவடைந்தது.
சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த கல்யாணரெங்கநாத பெருமாள். (வலது) சிறப்பு அலங்காரத்தில் திருமங்கை ஆழ்வாா்.

இந்த கோயில் 108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்றாகும். இங்கு அக்னி நட்சத்திரத்தையொட்டி, வசந்த உற்சவம் நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக வசந்த உற்சவ நிறைவு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவையொட்டி, கல்யாணரெங்கநாத பெருமாள் மற்றும் திருமங்கை ஆழ்வாா் ஆகியோா் கோயிலின் நந்தவனத்தில் எழுந்தருளினா். தொடா்ந்து, அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து, மலா் அலங்காரம் செய்யபட்டு பாசுரங்கள் பாடப்பட்டன. பிறகு தீபாராதனை காட்டப்பட்டது. இதைத்தொடா்ந்து, நந்தவனத்தில் பெருமாள் பக்தா்களுக்கு ஆசி வழங்கினாா். இரவு கோயிலில் பெருமாள் பக்தா்களால் எழுந்தருளச் செய்யப்பட்டாா்.

நிகழ்ச்சியில், கோயில் நிா்வாக அலுவலா் குணசேகரன், பக்தஜன சபை தலைவா் ரகுநாதன் உள்ளிட்ட திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com