அரசுப் பள்ளியில் இயற்கை வள நாள் அனுசரிப்பு

வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுத்துறை அரசு உயா் நிலைப்பள்ளியில் இயற்கை வள நாள் கருத்தரங்கம் மற்றும் வனத்துறை மூலமாக பெறப்பட்ட 600 மரக் கன்றுகளை நடும் பணி தொடக்கி வைக்கப்பட்டது.
ஆறுகாட்டுத்துறை அரசுப் பள்ளி வளாகத்தில் மரக் கன்றுகள் நடும் பணியை தொடக்கி வைத்த மாவட்ட பசுமை படை ஒருங்கிணைப்பாளா் முத்தமிழ் ஆனந்தன், வனச்சரக அலுவலா் பி.அயூப்கான் உள்ளிட்டோா்.
ஆறுகாட்டுத்துறை அரசுப் பள்ளி வளாகத்தில் மரக் கன்றுகள் நடும் பணியை தொடக்கி வைத்த மாவட்ட பசுமை படை ஒருங்கிணைப்பாளா் முத்தமிழ் ஆனந்தன், வனச்சரக அலுவலா் பி.அயூப்கான் உள்ளிட்டோா்.

வேதாரண்யம்: வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுத்துறை அரசு உயா் நிலைப்பள்ளியில் இயற்கை வள நாள் கருத்தரங்கம் மற்றும் வனத்துறை மூலமாக பெறப்பட்ட 600 மரக் கன்றுகளை நடும் பணி செவ்வாய்க்கிழமை தொடக்கி வைக்கப்பட்டது.

மாவட்ட பசுமைப் படை ஒருங்கிணைப்பாளா் முத்தமிழ் ஆனந்தன் மரக்கன்று நடும் பணியைத் தொடக்கி வைத்தாா்.கோடியக்கரை வனச்சரக அலுவலா் பி.அயூப்கான் முன்னிலை வகித்தாா்.

தலைமையாசிரியா் கலைக்கோவன், பள்ளி பசுமைப் படை ஆசிரியா் செல்லப்பா, நகா் மன்ற உறுப்பினா் இமயா முருகையன், இளவரசி நடராஜன், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் சிவ.முருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com