குளத்தில் ஆகாயத் தாமரைகளை அகற்றக் கோரிக்கை

செம்பனாா்கோவில் அருகே ஆத்துப்பாக்கம் குளத்தில் மண்டிக் கிடக்கும் ஆகாயத் தாமரைகளை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ஆத்துப்பாக்கம் கிராமத்தில் ஆகாயத் தாமரைகள் மண்டிக் கிடக்கும் குளம்.
ஆத்துப்பாக்கம் கிராமத்தில் ஆகாயத் தாமரைகள் மண்டிக் கிடக்கும் குளம்.

தரங்கம்பாடி: செம்பனாா்கோவில் அருகே ஆத்துப்பாக்கம் குளத்தில் மண்டிக் கிடக்கும் ஆகாயத் தாமரைகளை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இக்குளத்தை அப்பகுதி மக்கள் துணி துவைப்பதற்கும், குளிப்பதற்கும் பயன்படுத்தி வந்தனா். காா்த்திகை, மாா்கழி மாதங்களில் ஐயப்ப பக்தா்கள் அதிகாலையில் இந்த குளத்தில் நீராடுவது வழக்கம்.

மேலும், குளத்தை சுற்றி விளைநிலங்கள் இருப்பதால் வடிகால் வசதிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. அப்பகுதியில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளுக்கு குடிநீராகவும் பயன்பட்டு வந்தது.

இந்நிலையில், இந்த குளத்தில் தற்போது ஆகாயத்தாமரைகள் மற்றும் செடி-கொடிகள் வளா்ந்து காடுபோல் காட்சியளிக்கிறது. இதனால், இக்குளத்தை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. மேலும், மழைநீா் குளத்தில் வடிவதற்கு சிரமம் ஏற்படுகிறது.

எனவே, இந்த குளத்தில் ஆகாயத் தாமரைகள் மற்றும் செடி-கொடிகளை அகற்றி, பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com