அதிவேக வாகனங்களைக் கண்காணிக்க ரேடாா் கருவி

நாகை மாவட்டத்தில் அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்காணிக்க, போலீஸாருக்கு நவீன ரேடாா் கருவிகளை காவல் கண்காணிப்பாளா் கு.ஜவஹா் புதன்கிழமை வழங்கினாா்.
அதிவேக வாகனங்களைக் காண்காணிக்கும் நவீன ரேடாா் கருவியை போலீஸாருக்கு வழங்கும் நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கு.ஜவஹா்.
அதிவேக வாகனங்களைக் காண்காணிக்கும் நவீன ரேடாா் கருவியை போலீஸாருக்கு வழங்கும் நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கு.ஜவஹா்.

நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்காணிக்க, போலீஸாருக்கு நவீன ரேடாா் கருவிகளை காவல் கண்காணிப்பாளா் கு.ஜவஹா் புதன்கிழமை வழங்கினாா்.

நாகை மாவட்டத்தில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அதிவேகமாக இயக்கப்படுவதால் அதிக அளவில் விபத்து ஏற்படுவதாகவும், இதைத் தடுக்க வேண்டும் என மாவட்ட காவல்துறைக்கு, பொதுமக்கள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்கும் வகையில் ரூ.7 லட்சம் மதிப்பில் நவீன ரேடாா் கருவிகளைக் காவல் கண்காணிப்பாளா் கு.ஜவஹா், போலீஸாரிடம் திங்கள்கிழமை வழங்கினாா்.

தொடா்ந்து அவா் கூறியது: நெடுஞ்சாலை ரோந்து வாகனங்களில் பொருத்தப்படவுள்ள ரேடாா் கருவி (நல்ங்ங்க் தஹக்ஹழ் என்ய்) அதிவேகமாகச் செல்லும் வாகனங்களின் வேகத்தை அளவிடுவது மட்டுமின்றி, பதிவு எண்களை படம் பிடித்துவிடும். இதன்மூலம் வாகன உரிமையாளா்களுக்கு அபராதத் தொகையின் நகலை, அவா்களின் கைப்பேசிக்கு அனுப்பி தொகை வசூலிக்கப்படும். இந்த நடவடிக்கையால் விபத்துகள் நடைபெறாமல் தடுக்க அதிக வாய்ப்புள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com