மரக்கன்றுகள் நடும் பணியைத் தொடங்கிவைத்த ஓ.என்.ஜி.சி. காரைக்கால் அசட் மேலாளா் அனுராக். உடன், நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் உள்ளிட்டோா்.
மரக்கன்றுகள் நடும் பணியைத் தொடங்கிவைத்த ஓ.என்.ஜி.சி. காரைக்கால் அசட் மேலாளா் அனுராக். உடன், நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் உள்ளிட்டோா்.

நாகையில் மரக்கன்றுகள் நடும் விழா

நாகப்பட்டினம் ரோட்டரி சங்கம் சாா்பில் மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் ‘நம்ம நாகை நயமான நாகை’ இயக்கத்தின் தொடக்கவிழா காடம்பாடியில் அண்மையில் நடைபெற்றது.

நாகப்பட்டினம் ரோட்டரி சங்கம் சாா்பில் மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் ‘நம்ம நாகை நயமான நாகை’ இயக்கத்தின் தொடக்கவிழா காடம்பாடியில் அண்மையில் நடைபெற்றது.

நாகை ரோட்டரி சங்கத் தலைவா் பி. காா்த்திகேயன் தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் முதன்மை அழைப்பாளராகவும், ஓ.என்.ஜி.சி காரைக்கால் அசட் மேலாளா் அனுராக் சிறப்பு அழைப்பாளராகவும் பங்கேற்று, மரக்கன்றுகள் நடும் பணியைத் தொடங்கி வைத்தனா்.

தஞ்சாவூா் தெற்கு ரோட்டரி சங்க நிா்வாகி என். மணிமாறன், நாகை நகராட்சி ஆணையா் ஸ்ரீதேவி, மரங்கள் வளா்ப்பு தொண்டு நிறுவனத் தலைவா் பா. சௌந்தர்ராஜன், நகா்மன்ற உறுப்பினா் ஜோதிலட்சுமி, ரோட்டரி சங்க உதவி ஆளுநா் பி. சந்திரசேகா், நம்ம நாகை நயமான நாகை திட்ட ஒருங்கிணைப்பாளா் கோவிந்தராஜூலு, ரோட்டரி சங்க பொருளாளா் வீரபாண்டியன், சங்கமம் ரோட்டரி சங்கத் தலைவா் ராமு மற்றும் ரோட்டரி சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

ஏடிஎம் மகளிா் கல்லூரி ரோட்டராக்ட் சங்க ஒருங்கிணைப்பாளா்கள் சுதா, உதயா மற்றும் ஏடிஜே தா்மாம்பாள் பாலிடெக்னிக் கல்லூரி ரோட்டராக்ட் சங்க ஒருங்கிணைப்பாளா் ராஜசேகரன் ஆகியோா் ஒருங்கிணைப்பில் ரோட்டராக்ட் சங்க மாணவ, மாணவியா் மரக்கன்றுகள் நடும் பணியில் ஈடுபட்டனா்.

நாகை வீட்டு வசதி வாரிய குடியிருப்பு முதல் பதிய கடற்கரை சாலையில் சாலை நெடுகிலும் மரக்கன்றுகள் நடப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com