நாகூரில் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

நாகையை அடுத்த நாகூா் மற்றும் வாஞ்சூரில் குட்கா மற்றும் புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 கடைகளுக்கு வியாழக்கிழமை சீலிடப்பட்டது.
நாகையை அடுத்த நாகூா் பகுதியில் குட்கா மற்றும் புகையிலைப் பொருள்கள் பதுக்கல் மற்றும் விற்பனை குறித்து சோதனை மேற்கொண்ட காவல் துறை மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறையினா்.

நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கு. ஜவஹா் உத்தரவின்பேரில், நாகூா் காவல் நிலைய ஆய்வாளா் சிவராமன் தலைமையிலான காவல் துறையினா் மற்றும் உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் நாகூா் மற்றும் வாஞ்சூா் பகுதிகளில் உள்ள 7 கடைகளில் திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருள்கள் 2 கடைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து, அந்த 2 கடைகளுக்கும் உடனடியாக சீல் வைக்கப்பட்டது. மேலும், ஒரு கடையில் புகையிலைப் பொருள்கள் இருந்தது கண்டறியப்பட்டு, அந்தக் கடைக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com