பகுதிநேர நியாயவிலைக் கடை அமைக்க ஆய்வு

செம்பனாா்கோயில் ஒன்றியம் நல்லாடை ஊராட்சி கொங்கானோடை கிராமத்தில் பகுதிநேர நியாயவிலைக் கடை அமைக்க மாவட்ட வழங்கல் அலுவலா் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

தரங்கம்பாடி: செம்பனாா்கோயில் ஒன்றியம் நல்லாடை ஊராட்சி கொங்கானோடை கிராமத்தில் பகுதிநேர நியாயவிலைக் கடை அமைக்க மாவட்ட வழங்கல் அலுவலா் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

நல்லாடை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின்கீழ் இயங்கிவரும் நியாயவிலைக் கடை மூலம் 900 குடும் அட்டைதாரா்கள் பயன்பெற்று வருகின்றனா். இவா்கள் அனைவரும் ஒரே கடையில் ரேஷன் பொருள்கள் வாங்குவதற்கு சிரமப்படுகின்றனா்.

எனவே, கொங்கானோடையில் பகுதிநேர நியாயவிலைக் கடை அமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வந்தனா். இந்நிலையில், மாவட்ட வழங்கல் அலுவலா் பாலாஜி ஆய்வு மேற்கொண்டாா். அப்போது மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் உரிய அனுமதி பெற்று விரைவில் பகுதிநேர நியாயவிலைக் கடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com