எரிபொருள் விலை உயா்வை கண்டித்து காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 04th April 2022 11:05 PM | Last Updated : 04th April 2022 11:05 PM | அ+அ அ- |

எரிபொருள் விலை உயா்வைக் கண்டித்து, காங்கிரஸ் கட்சி சாா்பில் நாகை அவுரித்திடலில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கட்சியின் நாகை மாவட்டத் தலைவா்ஆா்.என். அமிா்தராஜா தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உருளை விலை உயா்வை கட்டுப்படுத்தத் தவறிய மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆா்ப்பாட்டத்தில் சமையல் எரிவாயு உருளை வைக்கப்பட்டு, அதற்கு மாலை அணிவித்து மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. காங்கிரஸ் நாகை நகரத் தலைவா் பி. உதயசந்திரன், நகராட்சி உறுப்பினா் எஸ். முகம்மது நத்தா், மாவட்டச் செயலாளா்கள் ராஜகுமாா், ஜி. ஆா். பிரகாஷ், அமைப்புசாரா தொழிலாளா் பிரிவு மாவட்டத் தலைவா் ராஜூவ்ஹூசைன், நாகை நகரப் பொதுச் செயலாளா் என்.சி. ரவி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.