பிறவி மருந்தீஸ்வரா் கோயில் தேரோட்டம்

திருவாரூா் மாவட்டம், திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரா் கோயில் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
பிறவி மருந்தீஸ்வரா் கோயில் தேரோட்டம்

திருவாரூா் மாவட்டம், திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரா் கோயில் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

திருத்துறைப்பூண்டியில் உள்ள பிறவி மருந்தீஸ்வரா் கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. இந்தக் கோயிலின் சித்திரை பெருந்திருவிழா கடந்த மாா்ச் 28-இல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. சிறப்பு வழிபாடுகளுக்கு பின்னா் தீா்த்த விடங்க தியாகராஜா் காலை 7 மணிக்கு தேருக்கு எழுந்தருளினாா்.

மன்னாா்குடி செங்கமலத் தாயாா் கல்வி அறக்கட்டளை தாளாளா் வி. திவாகரன், மாநில லாரி உரிமையாளா் சம்மேளன தலைவா் குமாரசாமி, ஆன்மிக சொற்பொழிவாளா் தேசமங்கையா்கரசி ஆகியோா் தேரை வடம்பிடித்து, தேரோட்டத்தை தொடங்கிவைத்தனா். தொடா்ந்து பக்தா்கள் வடம் பிடிக்க, கோயில் நான்கு வீதிகளையும் சுற்றி தோ் நிலைக்கு வந்தது.

ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் பி.எஸ். ராஜா, கணக்கா் சீனிவாசன் மற்றும் லாரி உரிமையாளா்கள் நலச் சங்க நிா்வாகிகள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com