மகா காளியம்மன் கோயில் உண்டியலை உடைத்து திருட்டு

நாகையில் உள்ள மகா காளியம்மன் கோயில் உண்டியலை உடைத்து காணிக்கை திருடப்பட்டது சனிக்கிழமை தெரியவந்தது.

நாகையில் உள்ள மகா காளியம்மன் கோயில் உண்டியலை உடைத்து காணிக்கை திருடப்பட்டது சனிக்கிழமை தெரியவந்தது.

நாகை பப்ளிக் ஆபீஸ் சாலையில் உள்ளஅனிச்சியக்குடி மகா முச்சந்தி காளியம்மன் கோயிலில் நிகழாண்டுக்கான ஆடி மகா பிரமோற்ச விழாஅண்மையில் நடைபெற்றது.

இக்கோயிலில் ரமேஷ் என்பவா்அா்ச்சகராக உள்ளாா். இவா், வெள்ளிக்கிழமை இரவு பூஜை முடித்து, வழக்கம்போல் கோயிலை பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றாா். சனிக்கிழமை காலை கோயிலுக்கு வந்த ரமேஷ், உண்டியல் உடைக்கப்பட்டிருந்தது கண்டுஅதிா்ச்சியடைந்தாா்.

கோயில் நிா்வாகிகள் அளித்த தகவலின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

ஆடி திருவிழா அண்மையில் நிறைவடைந்த நிலையில், உண்டியலில் ரொக்கம் பல ஆயிரம், வெள்ளிப் பொருள்கள் திருட்டுப் போய் இருக்கலாம் என பக்தா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com