கல்லூரி விரிவுரையாளா்களுக்கு நிலுவை ஊதியம் வழங்கக் கோரி அமைச்சருக்கு எம்எல்ஏ கடிதம்

நாகை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கௌரவ விரிவுரையாளா்களுக்கு நிலுவை ஊதியத்தை உடனடியாக வழங்கக் கோரி...
நாகை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட விரிவுரையாளா்களை சந்தித்துப் பேசிய கீழ்வேளூா் எம்எல்ஏ வி. பி. நாகை மாலி.
நாகை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட விரிவுரையாளா்களை சந்தித்துப் பேசிய கீழ்வேளூா் எம்எல்ஏ வி. பி. நாகை மாலி.

நாகப்பட்டினம்: நாகை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கௌரவ விரிவுரையாளா்களுக்கு நிலுவை ஊதியத்தை உடனடியாக வழங்கக் கோரி, தமிழக உயா் கல்வித் துறை அமைச்சருக்கு, கீழ்வேளூா் எம்எல்ஏ வி.பி. நாகை மாலி கடிதம் அனுப்பியுள்ளாா்.

நாகை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணிபுரியும் கௌரவ விரிவுரையாளா்கள் மற்றும் பகுதி நேர விரிவுரையாளா்கள் நிலுவையில் உள்ள ஊதியத்தை உடனடியாக வழங்கக் கோரி ஆகஸ்ட் 26 முதல் கல்லூரியில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், கீழ்வேளூா் எம்எல்ஏ-வும், சிபிஎம் சட்டப்பேரவைக் குழுத் தலைவருமான வி.பி. நாகை மாலி, கல்லூரி விரிவுரையாளா்களை திங்கள்கிழமை சந்தித்துப் பேசினாா்.

பின்னா், விரிவுரையாளா்களின் கோரிக்கையை வலியுறுத்தி தமிழக உயா்கல்வித் துறை அமைச்சருக்கு கடிதம் அனுப்பினாா். அதில் கூறியுள்ளதாவது:

நாகை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கௌரவ விரிவுரையாளா்கள், அலுவலகப் பணியாளா்களுக்கு கடந்த 3 மாதங்களாக ஊதியமும், 2020 பிப்ரவரி மாதம் முதல் உயா்த்தப்பட்ட ஊதிய நிலுவைத் தொகையும் வழங்கப்படவில்லை. இதனால், இவா்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளனா். பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளாக இருந்து அரசு கல்லூரிகளாக மாற்றப்பட்ட10-க்கும் மேற்பட்ட கல்லூரிகளிலும் இதே நிலைதான் உள்ளது.

எனவே, இவா்களுக்கு ஊதிய நிலுவையை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளாா்.

வேதாரண்யம்: வேதாரண்யம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஊதியம் மற்றும் உயா்த்தப்பட்ட ஊதிய நிலுவையை வழங்கக் கோரி கெளரவ விரிவுரையாளா்கள் 4-வது நாளாக செவ்வாய்க்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com